பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாளும் கல்வினை செய்க 'தீவினை என்பது யாது?’ என வினவின் ஆய்தொடி நல்லாய்! ஆங்கது கேளாய் கொலையே, களவே, காமத் தீவிழைவு உலையா உடலில் தோன்றுவ மூன்றும்; பொய்யே, குறளை, கடுஞ்சொல், பயனில் சொல்எனச் சொல்லில் தோன்றுவ நான்கும் வெஃகல், வெருளல், பொல்லாக்காட்சி என்று உள்ளந் தன்னில் உருப்பன மூன்றும்-எனப் பத்து வகையால் பயன்தெரி புலவர் இத்திறம் படரார்; படர்குவர் ஆயின் விலங்கும் பேயும் நரகரு மாகி கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர் நல்வினை என்பது யாது?’ என வினவின் சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி சீலம் தாங்கி, தானம் தலைநின்று மேல்என வகுத்த ஒருமூன்று திறத்து தேவரும் மக்களும் பிரமரும் ஆகி மேவிய மகிழ்ச்சியின் வினைப்பயன் உண்குவர்” -சாத்தனார்-மணிமேகலை(24, ஆபுத்திர நாடு அடைந்த காதை-123.140)