பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 99 ‘பஸ்'ஸிலெல்லாம் இனாம் சலுகை; வேறு பல அரசாங்க உதவிகள்; இப்படிப் பலப்பல. எனவே அதற்கெல்லாம் போட்டி இருந்தது. நான் சிறிய பிள்ளையாக இருந்தமையால் அது பற்றி எல்லாம் அதிகமாகத் தெரியர்து. என்றாலும் அந்தத் தேர்தல் வேடிக்கைகளில் நான் கலந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதுண்டு. காந்திக்கு ஜே. காங்கிரசுக்கு'ஜே என்றெல்லாம் அந்தக் காலத்தில் கூப்பாடு கிடையாது ஒவ்வொரு தொகுதிக்கு இருவர் மூவர் நிற்பார்கள். சாமர்த்தியமுள்ளவர்கள் வெற்றி பெறுவார்கள். இரவுக் காலங்களில் உதைகள் பரிமாறிக்கொள்வதும் உண்டு. மிகச் சிறிய வயதிலேயே எங்களுர்க் கோயில் தேர்வில் இக்காட்சி களையெல்லாம் கண்ட எனக்கு இதிலெல்லாம் புதுமை ஒன்றும் தெரியவில்லை. வாலாஜாபாத் இந்துமத பாடசாலையில் நான்)படித்துக் கொண்டிருந்தேன். வீரராகவாச்சாரியார் என்பவர் பள்ளி யின் தலைமை ஆசிரியர். அவர்கள் வீட்டுப் பிள்ளையைப் போல் நான் அவர்களிடம் பழகினேன். தலைமை ஆசிரியரின் மனைவியார் குளிக்கப் போகுமுன் என்னை அழைத்துத் தலைவாரிப் பின்னுவார்கள். இரவு பகலெல்லாம் அவர்கள் வீட்டில் குழந்தையாக உண்டு வளர்ந்தேன். அந்த அம்மையாரின் பரிவு என்றென்றும் என் உள்ளம்விட்டு நீங்காது. எஜ் வீட்டில் என் தாயார் பள்ளிக்குச் செல்லு முன் எனது நீண்ட மயிரை வாரிப் பின்னல் இட்டே அனுப்புவது வழக்கம். சில பிள்ளைகள் அந்த நீண்ட பின்னலை ஒட்டி என்னை வால் என்றேகூட"அழைப்பார் கள். நான் அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. என் தாயார் வாரிவிட்ட பின்னலுடன் பல நாள் பள்ளி வந்திருப் பதை அந்த அம்மையார் கண்டிருந்தார்கள். அவர்கள் அந்தணராக இருந்தமையால் குளிக்கப் போகுமுன் என்னை அழைத்து உட்காரவைத்து வா, உங்கள் வீட்டில் அம்மா