பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 16 . ஆனந்த முதல் ஆனந்த வரை விடமாட்டான்' என்று சொல்லி, நெடுநேரம் பேசிப் பிறகு என் அன்னையாரை இணங்க வைத்தார்கள். தன் மகன் நன்றாகச் சிறக்க இருக்கிறான்' என்பதை அறியின் எந்த அன்னைதான் விரும்பமாட்டர்ர்கள்? அம்மாவும் சரி என்றார்கள். என்றாலும் பிறகு என்னை அவர்கள் செங்கற் பட்டு அனுப்பும் போதும் மிகவும் வருந்தினார்கள். எப்படியோ ஒரு நல்ல நாளில் நான் என் பாட்டியாரை உடன் அழைத்துக் கொண்டு செங்கற்பட்டு சென்று, கொலம்பாஸ் உயர்நிலைப் பள்ளியில் நான்காவது படிவத்தில் (ஒன்பதாம் வகுப்பு) சேர்ந்துவிட்டேன். செங்கற்பட்டு மாவட்டம் என்ற பெயர் இருப்பினும், செங்கற்பட்டில் மாவட்டத் தலைமை அலுவலகம் ஒன்றும் கிடையாது. அது ஒரு சிறிய பேரூர்; அவ்வளவே. அங்கு அக்காலத்தில் இரண்டு உயர்நிலைப் பள்ளிகள் தாம் இருந்தன. எங்கள் ஊரில் இருந்தே ஒருவர் அங்கே சென்று பயின்று வந்தார். அவர் துணையைப்பற்றிக் கொண்டு நானும் எப்படியோ அங்கு சேர்ந்து படிக்கத் தொடங்கி விட்டேன். செங்கற்பட்டில் ஒர் ஒதுக்குப்புறமாக உள்ளது பெரிய நத்தம் என்ற பகுதி. அதில் ஒர் அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். ஒரே அறையில் ஒரு மூலையில் பாட்டியார் சமைப்பார்கள். ஒரு மூலையில் நான் எனது பெட்டியை வைத்துக் கொண்டு படிப்பேன். சில சமயங்களில் வெளித் தாழ்வாரத்திலும், தெருத் திண்ணை யிலும் கூடப் படிப்பதுண்டு. பாடங்கள் எல்லாம் ஆங்கிலத்தி லேயே இருந்தமையின் முதலில் சற்றுக் கடினமாகவே இருந்தன. போகப்போகச் சிறிது சிறிதாகப் புரிந்துகொண் டேன். என் வகுப்பிலே பயிலும் சில மாணவர்கள் என் வீட்டுக்கு அருகிலேயே குடியிருந்தார்கள். அவர்களும் என்னைப்போலக் கிராமங்களிலிருந்து படிக்கும் பொருட்டா கவே அங்கு வந்து குடியிருந்தவர்கள். அவர்களோடெல்லாம்