பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 119 நோய்வாய்ப்பட்டது போலவும் அருகில் இருந்து ஒருவரும் ஆறுதல் சொல்லலில்லை என்ற காரணத்தால் அவர்கள் வருந்தினது போலவும், அந்தத் துயர்த் திடையில் நோயும் வருத்த அவர்கள் வாடி வாடி உயிர்விட்டது போலவும் கண்ட கனவினாலேதான் அப்படி அஞ்சி அலறிக் கூச்சலிட் டேன், என்றாலும் இக்கனவைப் பாட்டியிடம் நான் சொல்ல வில்லை. சொல்ல நா எழவில்லை. பெற்றெடுத்துப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்த அன்னையின் மறைவை யார் தான் சகிக்க முடியும்? கனவிலே நடந்த நிகழ்ச்சியாயினும் அது நனவிலே நடக்கக்கூடாதே என்ற கவலைதான் எனக்கு அதிகமாகியது. அந்த நிலையில் நான் உறங்குவது எங்கே? இரண்டு நாட்களுக்கு முன்தான் எங்கள் ஊரிலிருந்து ஒருவர் வந்திருந்தார். அவர் மூலம் அம்மா முறுக்கும் நெய்யும் கொடுத்தனுப்பி இருந்தார்கள். நன்றாக இருந்தார் கள் என்றும் யாதொரு நோயும் அவர்களுக்கு இல்லை என்றும் அவர் சொன்னார். அப்படி இருக்க நான் கனவில் கண்டபடி இரண்டு நாளில் தாயார் எப்படி நோயுற்று 'இறப்பார்கள் என்று எண்ணினாலும் சிந்தை தளர்ந்தேன். தாயின் பிரிவு நினைக்கமுடியாத ஒன்றாக நெஞ்சை வருத் தியது. பெற்ற மகன் எங்கேயோ இருக்க, தனி வீட்டில் கேட்பார் இல்லாத அனாதையாகவா என் அன்னை இறந் திருப்பார்கள் என்று கேட்டது என் நெஞ்சம். ஐந்தாறு திங்களுக்கு முன்தான் தந்தையை இழந்த நான்-தந்தை யாய்த் தாயாய் எல்லாமாய் இருந்த என் அன்னையை இழப்பதென்றால்-என்னால் நம்பவே முடியவில்லை. இந்த எண்ணங்களுக்கு இடையில் நான் மறுபடியும் உறங்கவில்லை. பொழுது புலர்ந்துகொண்டே இருந்தது. மனம் மட்டும் ஏதோ அச்சத்தால் அலறிக் கொண்டிருந்தது. ஒருபுறம் அன்னைக்கு யாதொரு தீங்கும் இருக்காது என்ற உணர்வும் அறிவுறுத்திக்கொண்டே இருந்தது. என்றாலும் ஏதோ ஒரு