பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 ஆனந்த முதல் ஆனந்த வரை பெருந் தீங்கு நடைபெற்றிருக்க வேண்டும் என்று அந்தப் பயங்கர இரவும் அதில் கண்ட கனவும் எனக்குச் சொல்லிக் கொண்டே இருந்தன. நான் அந்த நாள் முழுதும் ஊரிலிருந்து செய்திகளைக் கொண்டு ஆள் வருவானோ என்று பார்த்துக் கொண்டே இருந்தேன். அப்படி ஒன்றும் அன்னையைப் பற்றிய அவலச் செய்தியை யாரும் கொண்டு வரவில்லை, என்றாலும் நான் கனவு கண்ட அதே வேளையில் எங்கள் ஊரில் ஒரு பயங்கரச் சண்டை நடை பெற்றுப் பல கொலை கள் நடந்தன என்ற செய்தியை யாரோ வந்து பாட்டியி னிடம் சொல்லிக்கொண்டிருந்தான், என்ன? எப்படி? என்பன திட்டமாகத் தெரியவில்லை. என்றாலும் பயங்கர இரவின் கனவினது பயன் வேறுவகையில் பலித்து விட்டதே என எண்ணினேன். இரண்டொரு நாட்களுக்குள் ஊர் நிகழ்ச்சி முழுதும் வந்துவிட்டது. 19, கோயில் சண்டை எங்களுர்க் கோயில் பற்றியும் அதில் நடந்த விழாக்கள். தேர்தல் பற்றியும் முன்னே பல முறை கூறியுள்ளேன். அந்தக் கோயிலால் தொடங்கிய சிறு சண்டை பெரிதாகி ஊருக்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்க, அதனால் சிலர் இறக்கப் பலர் காயமுற நேர்ந்ததை நினைத்தாலும் நெஞ்சு நடுங்குகிறது. எல்லாரும் ஒன்றித் தொழவேண்டிய இறைவனின் பொருட்டுத் தமக்குள் தாமே மாறுபட்டுக் கலகம் விளைத்துக் கொலையும் செய்யத் துணிந்த மக்கள் நிலையை என்னென் பது? கோயில் அறக்காப்பாளர்கள் தம் மனம்போன போக் கிலே போக வாய்ப்பும் வழியும் அந்தக் காலத்தில் இருந்தன. எனவே அதற்குப் போட்டியும் பலமாக இருந்தது. இந்தக் காலத்திலும் ஒரு பயனும் இல்லை என்றாலும்கூட, வெறும்