பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ஆனந்த முதல் ஆனந்த வரை மக்கள் தத்தம் கட்சிக் காரியத்தைச் சாதித்துக் கொண்டார் கள். இன்றும் அன்றைய அந்தச் செயலே அவ் வேளாளர் வாழ்வை ஊரில் பாழாக்கிவிட்டது என்னலாம். சிறு சிறு சண்டைகளாக வளர்ந்த ஊர்ச் சண்டை . கோயில் வம்பு-கொதித்துக் கொதித்துப் பெரும் போராக மாறிவிட்டது. சிந்தாக எழுதித் தெருவில் அரையனாவிற்குப் பாட்டுப்பாடி விற்கும் அளவிற்கு ஊரில் போர்மூண்டு விட்டது என்னலாம். நான் ஊரில் என் இளமை தொட்டே வாழ வில்லை. வாலாஜாபாத்தில் படித்தபோது, பெரும்பாலும் அங்கேயே தங்கினேன். பிறகு உயர்நிலைப் பள்ளியில் பயிலு வதற்காக நான் செங்கற்பட்டு சென்றுவிட்டேன். ஊரில் இருந்திருப்பேனானால் எத்தனையோ கொடுமைகளை நான் கண்டிருக்கக்கூடும். அந்த நிலை எனக்கு உண்டாகவில்லை என்றாலும் அவ்வப்போது ஊரில் நடைபெறும் கொடுமை களை நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். முன் பகுதியில் நான் கண்ட பயங்கரக் கனவின் பலன் மறுநாள் எனக்குக் கிட்டிற்று. அதுவே ஊரில் நடந்த இந்தக் கொலை. நான் எந்நேரத்தில் அக்கனவினைக்கண்டு கண்விழித்தேனோ அதே வேளையில்தான் அங்கு என் சொந்த ஊரில் ஒன்று. இரண்டு, மூன்று என்று துப்பாக்கிக் குண்டுகள் மக்கள் உயிரைப் பருகிக் கொண்டிருந்தன. இருவேறு கட்சிகளுக்கு இடையில் இருந்த கோயிற் பகைமை ஊர்ப்பகையாக மாறிற்று. சிறிய கட்சி, பெரியகட்சி என்று இரு கட்சிகள் உருவாயின. சிறிய கட்சி முதலியார்கள் தாம் அளவில் சிறியவராக இருந்தமையின் உடன் துணைக்குச் சேரியாரை அழைத்துக் கொண்டார்கள். கட்சிக் காரர்கள் தனிமையில் வெளியூர் செல்லும்போது மற்றவர் அவர்களை நையப்புடைப்பர். பதிலுக்குப் பயன் கிடைக்கும். இந்தப்.போராட்டத்தில் சேரியில் வாழ்ந்த பெருவாரியான மக்கள் சிறிய கட்சியின் துணையாட்களானார்கள்.