பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 - ஆனந்த முதல் ஆனந்த வரை யார் யார் என்னென்ன செய்தார்களோ! அந்த அம்பல வாணன்தான் அறிவார். போர் மூண்டுவிட்டது. சேரியார் விரட்டப்பட்டனராயினும், இறுதியில் ஒரு விட்டில் இருந்து வெளிப்பட்ட துப்பாக்கிக் குண்டு, ஊரில் சிலர் உயிரைக் கொண்டு, பலர் உடலையும் காயப்படுத்திவிட்டது. பிறகு ஒரே அமளி-போலீசு வந்திருக்கும். மேல் ஏதேதோ நடை பெற்றிருக்கும். வழக்கு மன்றம்-விசாரணை-முடிவு - இப்படிப் பலப்பல. மறு நாள் செங்கற்பட்டில் எங்கள் வீட்டிற்கு ஆள் வந்தது. அதற்குள் ஊர் நிகழ்ச்சியைப்பற்றிப் பலப் பலவாறு தகவல்கள் வந்துகொண்டே இருந்தன. என் பாட்டியார் எல்லாவற்றையும் கேட்டுக் கேட்டுக் கண்ணிரை ஆறாகப் பெருக்கினார்கள்.-அவர்கள் அந்த ஊரில் நன்றாக வாழ்ந்த வர்கள். அந்த ஊரில் வாழ்ந்த அத்தனைக் குடும்பங்களும் ஒரே குடும்பம் என்னுமாறு பலகாலம் கூடி வாழ்ந்ததை அவர்கள் கண்ணாலேயே கண்டவர்கள். அவர்தம் கண் முன்பே இத்தகைய கொடுமை நடப்பதென்றால் அவர்கள் வருந்தாது என்ன செய்வார்கள்? இரண்டொரு நாளில் எல்லா உண்மைகளும் தெரியலாயின. பத்திரிக்கைகளில் பல செய்திகள் வந்தன. கொன்றவரும், அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவரும் செங்கற்பட்டிற்குக் கொண்டுவரப் பட்டார்கள். பிறகு வழக்கு நடந்தது. எப்படியோ ஒருவாறு . எல்லா-வழக்குகளும் முடிவுற்றன என்றாலும் என் பாட்டியார் இறக்கும்வரையில் இந்தக் கொடுமைகளைப்பற்றி யெல்லாம் வந்தவர்களிடத்தில் சொல்லிச் சொல்லி வருந்து வார்கள். எனக்கும் ஊர் செல்வதற்கே ஒரே பயங்கரமாசு இருந்தது. இப்படி ஒரே குலத்தில் பிறந்து, அறம் பேணும் அறிவுக் கோயில் வழியாக, அடங்காப் போர் நடத்தி, ஊரைக் கெடுத்த மக்கள் யாராயினும் சரி அவர்கள் செயல் உலகம் உள்ளளவும் மறையாது. இன்று ஊரில் அந்தப் பெரு வேறுபாடுகளெல்லாம் மறைந்து ஓரளவு அமைதி நிலை கொண்டிருப்பது காண உளம் மகிழ்கின்றது.