பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 26 ஆன்ந்த முதல் ஆனந்த வரை எங்கள் ஊருக்கு அருகில் உள்ளது என்றாலும், அங்கு அடிக்கடி விழாவும் வேடிக்கையும் நடப்பதாலும் சுற்றுப்புறங் களிலிருந்து பலரும் வந்துகொண்டே இருப்பதாலும், அன்னையார் செங்கற்பட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு அத்தகைய ஆரவாரங்கள் இல்லை. என்றாலும் மாணவர் கூட்டத்தில் நல்லவர் கெட்டவர் இருசாராரும் வாழ்ந்துதான் இருந்தார்கள். நான் ஊருக்குப் புதியவன் ஆதலால் யாரோடு பழகுவது என்று தெரியாது அலமந்தேன். மேலும் மேற்பார்வையில் நடத்திச் செல்ல ஆசிரியரோ உற்ற அன்னையோ அருகில் இல்லாதது குறையாகத்தான் இருந்தது. நான் நான்காவது படிவம் பயின்றுகொண்டிருந்த அந்த நாளில் இடைவேளை நேரத்திற்கு விட்டுக்கு உணவுண்ண வந்துவிடுவது வழக்கம். ஒரு நாள் எவ்வாறோ பள்ளியில் தங்கினேன். அன்றுதான் பிரம்படி பெற்றேன். எங்கள் பள்ளியில் முறைப்படி இருக்க வேண்டிய தலைமை ஆசிரியர் நீண்ட விடுமுறையில் இருந்தார். அவருக்குப் பதிலாக வேறொருவர் அப் பதவியில் பணி யாற்றினார். அவர் வயதில் இளையவர். வகுப்புகளுக்கு முடுக்காக வருவார். பிள்ளைகளைப் பல கேள்விகள் கேட்பார். பிள்ளைகள் தவறு செய்வார்களாயின் தட்டாது தண்டனையும் தருவார். யாரிடத்திலும் அவர் தாராளமாக மனம் விட்டுப் பேசி அறியார் என எண்ணுகின்றேன். ஆசிரியர்கள் எல்லாரும் கூட அவருக்கு அஞ்சுவார்கள். பின் மாணவர்களைப் பற்றிக் கேட்பானேன்! இவ்வளவு கொடியவர் என்று பெயரெடுத்தாலும்கூட, அவர் பள்ளிக் கூடச் செயல்முறை வழியில் ஒழுங்காகவே இருந்தார். மாணவர் விருப்பத்தின் வழி ஒழுகி, அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்யவும் அவர் என்றும் பின்வாங்கிய தில்லை. அவர்கள் நலனில் அக்கறை கொண்டே அரும்பாடு பட்டார். எனவே மாணவர்களுக்கு அவர்பால் ஒருபக்கம்