பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ஆனந்த முதல் ஆனந்த வரை கழகத் தேர்வுச் சம்பந்தமான ஒரு கூட்டத்தின் இடையில் அவர்களைக் கண்டேன். நலமா என்றார்கள். தாங்கள் வாழவைத்த நலம் கெடுமா என்றேன். அவர் சிரித்தார். அருகில் இருந்தவர்கள் ஒன்றும் புரியாது விழித்தார்கள். நான் அனைத்தையும் விளக்கினேன். அவர் என்னைத் தட்டிக் கொடுத்தார். நான் அதைப் பெருமையாக ஏற்றுக் கொண்டேன். இப்படி வாழ்வைத் திருந்தச் செய்த பிரம் படியைப் பற்றி இங்கு நான் காட்டாதிருக்க முடியுமா! - 21. ஒருத்தியும் மகனும் அப்போது நான் ஐந்தாவது படிவம் படித்துக் கொண்டி ருந்தேன். எங்களுக்குப் பள்ளி இறுதி வகுப்புக்குள்ள தமிழ் ஆங்கிலப் பாடங்களையே வைப்பது வழக்கம். தமிழ்ப்பாடத் தொகுதியில் பலருடைய பாடல்களும், ஆங்கிலப் பாடத்தில் பலருடைய பாடங்களும் இடம் பெறும். எனது தமிழ்ப்பாட நூலில் அந்த ஆண்டு பல நல்ல தமிழ்ப் பாடல்கள் இடம் பெற்றன. ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் என்று தொடங்கும் திருநாவுக்கரசருடைய திருப்பாதிரிப்புலியூர்ப் பதிகம் முதலில் தோத்திரமாக அமைந்தது. பின் பலப்பல பாடல்கள் இருந்தன. திருக்குறளும் நாலடியும் இடம் பெற்றன. பின்னர்க் கதைப் பகுதி வந்தது. அதில் ஒரு பகுதி திருவிளையாடற் புராணத்திலிருந்து எடுக்கப்பட்டது. மாமனாக வந்து வழக்குரைத்த படலம் என்பது அது. அதில் ஒரு மாதுலன் தனக்கு மகப்பேறு இன்மையால் தன் தமைக்கை மகனைத் தன் மகனாக ஏற்றுக்கொண்டு பொருள் அனைத்தையும் அவனுக்கே வைத்துவிட்டுச் சிலநாள் கழித்து இறக்கவும், அவனுடைய தாயத்தார் அவன் இறந்த உடனே எல்லாச் செல்வங்களையும் தங்களுடையதாகக் கைப்பற்றி