பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 131 அப்பிள்ளையையும் அவனைப் பெற்ற தாயையும் திண்டாட வைத்ததாகக் கூறப்பெறுகின்றது. பின் அலமந்த அந்த அன்னை தன்னைக் கவனிப்பாரின்மையின் கவன்று, மதுரைக் கோயிலில் உள்ள இறைவனிடம் சென்று முறையிட்டு, அழுது அழுது அப்படியே உறங்கிவிட, அவள் கனவில் இறைவன் தோன்றி அருள் புரிந்ததாகக் கூறப் பெறுகின்றது. அவ்விறைவன் அவளை மறுநாள் நீதிமன்றம் சென்று முறை யிடப் பணித்தான். அப்படியே அவள் செய்ய, மறுநாளே இறைவன் தானே மாமனாகச் சென்று வழக்குரைத்துத் தாயத்தாரைத் தலை குனிய வைத்து எல்லாச் செல் வத்தையும் தன் மருமகனுக்கு உரிமையாக்கி மறைந்தான் என முடிகின்றது. இது வெறும் கதை போன்றதுதான். என்றாலும் பலருடைய வாழ்க்கை வரலாறுகள் அதில் பின்னிக் கிடக்கின்றன என்னலாம். அதில் அத்தகைய சொக் கேசர் கோயிலில் சென்று இறைவனைப் மனமுருகப் பாடி நைந்து நைந்து கசிந்து நின்ற பாடல் என் உள்ளத்தைத் தொட்ட ஒன்றாகும். அதுவும் என் அன்னை அதன் உள்ளாழத்தைக் காட்டிய பிறகு என்னை உணர வைத்தது என்னலாம். அது எந்தப் பாடல்! . ஒருத்திநான் ஒருத்திக்கிந்த ஒருமகன் இவனும்தேரும் கருத்திலாச் சிறியன் வேறு களைகணும் காணேன் ஐய! அருத்திசால் அறவோர் தேரும் அருட்பெருங்கடலே (எங்கும் இருத்தி நீ அறியாய் கொல்லோ என்று பார்படிய - (வீழ்ந்தாள், என்ற பாடலே அது. ஆம். இந்தப் பாடல் என் தாயின் கண்களை வற்றாக் குளமாக்கின, பொங்கல் விடுமுறையின்போது நான் எனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். எனது பல பாடங்களையும் வைத்து நன்முறையாகப் படிப்பது உண்டு. அப்போது சிறு கைவிளக்கு, அல்லது லாந்தர் விளக்குத்தான். அந்த நாளில்