பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ஆனந்த முதல் ஆனந்த வரை வீட்டை விட்டு வெகுதூரம் வந்து விட்டோம். பள்ளிக்கு இன்னும் ஒரு பர்லாங்கு தூரம்தான் இருக்கும். ஒரு திருப்பம். நாங்கள் குறுக்காகப் புகுந்து அத்திருப் பத்தைக் கடந்து செல்லவேண்டும். அவ்வாறு சென்று கொண்டிருந்தபோது எங்கள் எதிரில் ஒரு சாமியார் எதிர்ப் பட்டார். அவர் பிள்ளைகளா நில்லுங்கள் என்றார். எங்கள் முகத்தில் அப்போதுதான் வீட்டில் இட்ட திருநீறு விளங்கிக் கொண்டிருந்தது. அவர் முகத்திலும் உடம்பிலும் நிறையப் பூச்சுக்கள் இருந்தன; இடையில் காவி அணிந் திருந்தார். தோளில் ஒரு பையும் கையில் சிறு தடியும் இருந்தன என நினைக்கின்றேன். எங்களை அவர் என்ன வென்று நினைத்தாரோ! சிறுபிள்ளைகள் தாமே என எண்ணி இருப்பார். ஆம், எண்ணித்தான் அழைத்தார் போலும். நாங்கள் உடனே நின்றுவிட்டோம். வேகமாகச் சென்ற எங்கள் நடை தடைப்பட்டது. நிறுத்தப்பட்டோம். சாமியார் இரண்டு கைகளையும விரித்துக் காண்பித்தார். கைகள் தூய்மையாகவே இருந்தன். உடனே வலக் கையை மூடினார்; உயர்த்தினார்; திறந்தார். திருநீறு அவர் கையில் இருந்தது. இந்தா இந்தப் பிரசாதம்; உங்களுக்காகவே கடவுள் கொடுத்தது; இட்டுக் கொள்ளுங்கள்’ என்றார். நாங்கள் இருவரும் உண்மையில் நடுங்கிக் போனோம். ஒரு வேளை பெரிய மந்திரவாதியோ அன்றி வேறு யாரோ இவ்வாறு நம்முன் வந்திருக்கிறார் என்று நான் நினைத்து விட்டேன். பல புராணக் கதைகளில் ஆண்டவன் திடீரென உருக்கொண்டு அடியவர்முன் தோன்றிக் காட்சி அளிப்பதை நான் படித்திருக்கிறேன். அப்படியே என்முன் அந்த ஆண்டவன்தான் வந்துவிட்டானா என எண்ணினேன். அந்த இளைய உள்ளம் அப்படியெல்லாம் நினைக்கச் செய்தது. ஆழ்ந்த சமயப்பற்றுக் கொண்ட குடும்பத்தில் பிறந்ததாலும், அவ்வாறு தெய்வநெறிவழிபோற்றி வளர்க்கப்