பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 141 வாழ வேண்டுமென்றும் காட்டி வீட்டுக்கு அனுப்பினார். நாங்கள் பிற்கு கூட்டத்துக்குப் போவது எங்கே? மணி ஏழாகியிருந்தது. நானும் என் நண்பரும் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம். இப்படி நாங்கள் ஏமாற்றப் பட்டதை இன்று நினைத்தாலும் அவமானமாக உள்ளது. ஆயினும் இன்றைக்கும் இது போன்று ஏமாற்றும் பாதகர் களும் ஏமாறும் நிலையிலுள்ள அப்பாவிகளும் இருப்பதைப் பத்திரிகைகள் வாயிலாகப் பயிலும்போது என்று இந்தக் கொடுமை நீங்கும் என எண்ணி உளம் நைகிறது. ஏமாற்றும் கொடுமை ஒழிந்து என்று நாடு திருந்துமோ? - 23. மூக்குத்தி ஒரு நாள் நானும் என் அன்னையும் வீட்டில் உட்கார்ந் திருந்தோம். அந்த வேளையில் எங்கள் தெருவில் குடியி ருக்கும் ஒருவர் வீட்டில் நுழைந்தார். ஒவ்வொரு ஊரிலும் ஒரு வேலையும் செய்யாது அப்படியே சுற்றிச் சுற்றித் திண்ணையிலும் பலகையிலும் படுத்து உறங்கிக் காலம் கழிக்கும் நல்லவர் ஒரு சிலராவது இருப்பார்கள் என்பது இப்போது எனக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனாலும் அன்று நான் படித்துக்கொண்டிருந்த அந்த நாளில் எங்கள் தெருவில் இப்படி ஒருவர் இருந்ததைக் காண நான் ஆச்சரியப்பட்டேன். ஊரில் உள்ளவர்களெல்லாம் காலையில் எழுந்து வயல் வேலை களுக்குச் சென்று வேலை செய்து கொண்டிருக்க, இப்படி ஒருவர் உட்கார்ந்து கொண்டு, வழியில் போவோர் வருவோரை எல்லாம் வலிய அழைத்து அவர்கள் வேலை யையும் கெடுத்துக் கொண்டு, வீண் பேச்சுப் பேசும் நல்லவர் போல் இருப்பதை நான் விடுமுறையில் ஊருக்குப் போகையில் அறிந்துகொண்டேன். நான் எங்காவது வெளியில் செல்ல