பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் - 145 அன்னையார் இந்தக் கதையைச் சொல்லி ஒரு பெரு மூச்சு எறிந்தார். ஆம்! நம்முடைய சொத்தானால்-நாம் மெய்வருந்திப் பாடுபட்ட பொருளானால் எத்தனை ஆண்டு கள் கழித்தாலும் அது நம்மைவிட்டுப் பிரிந்தே போய்விட் டாலும் எப்படியும் திரும்ப நம்மிடமே வந்துசேரும் என்று நான் அடிக்கடி சொல்லுவது எவ்வளவு மெய் என்று உனக்குத் தெரிகிறதா?’ என்று கேட்டார்கள். நானும் ஆம் என்று தலையாட்டினேன். எத்தனையோ முறை வெள்ளம், மண் மேடுகள், பள்ளங்கள்-இடையிலே கழிந்த எத்தனையோ நாட்கள்-இவற்றையெல்லாம் கடந்து, அந்தச் சிறுபொருள். மூக்குத்தி கிடைத்ததை என்னவென்று சொல்வது! அது மண்ணோடு மண்ணாக மறைந்து போயிருக்கலாம், அன்றி வேறு தனியாக யாரிடமாவது அகப்பட்டு விற்கப்பெற்றிருக் கலாம். இத்தனை நாள் கழித்தும் ஒரு தனி மனிதனிடம் அகப்பட்டிருந்தால் ஒருவேளை வெளிவராது போனாலும் போயிருக்கும். ஆனால் நான்கைந்து பேருக்கிடையில் அது கண்டுபிடிக்கப் பெற்றமையின் வீடுவந்து சேர்ந்தது. அதன் விலை ஒன்றும் அதிகம் இல்லைதான். அதிகமாக இருந்தால் பதினைந்து-இருபது ரூபாய் இருக்கும். எனினும் அது உரியவரிடம் இத்தனை ஆண்டுகள் கழித்து வந்து சேர்ந்தது என்றால்-அதுவும் வெள்ளத்திற்கும் பள்ளத்திற்கும் ஈடு கொடுத்து வெளிப்பட்டு உரியவரிடம் வந்தது என்றால்அதை எண்ணி வியவாதிருக்க முடியுமா! - இந்த நிலையில் எனக்கு மற்றொன்றும் நினைவு வருகிறது. ஒருகால் என் அன்னையார் எங்கள் ஊரில் ஒரு துக்கம் விசாரிக்கச் சென்று வந்தார்கள். மாலையில் விசாரித்துவிட்டு அப்படியே ஆற்றில் செல்லும் ஒடையில் மூழ்கி விட்டு வந்தார்கள். எல்லாருமே அப்படித்தான் செய்வது வழக்கம். துக்கம் விசாரிக்கச் செல்லுபவர்கள் அப்படியே வீட்டிற்குள் புகக்கூடாது என்பது பழக்கம். é一10 .