பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ஆனந்த முதல் ஆனந்த வரை எங்கள் ஊரில் நிலத்தை விற்பவரும் வாங்குபவரும் பலர். அடிக்கடி விற்பனைப்பத்திரம் வாங்கி எழுதவேண்டிய வேலை ஊரில் அன்று கணக்கர் கையில் இருந்தது. ஊரில் சிலர் படித் தவர்கள் இருந்தாலும் அந்த வேலையைச் செய்ய யாரும் செல்வதில்லை. ஒரு வேளை அதனால் கணக்கப்பிள்ளையின் விரோதத்தைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டுமே என்ற காரணத்தினாலோ, நமக்கு ஏன் இந்த வேலை எல்லாம்' என்ற சோம்பல் எண்ணத்தினாலோ அன்று ஏனோ யாரும் அந்த எழுத்து வேலைக்கு வருவதில்லை. கணக்கப்பிள்ளையும் அவற்றையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு பத்திரத்துக்கு இவ்வளவு ரூபாய் என்று முன் பேசிக் கொண்டே எழுதுவார். சில சமயம் பத்திர ஸ்டாம்பு’க்குக் கொடுக்க வேண்டிய கணக்கைவிட அதிகமாகப் பணம் கேட்டு வாங்குவார், அப்படிப் பணம் வாங்கி, எங்கள் ஊரில் பெரிய பணக்காரர் என்னுமாறு அவர் வாழ்ந்து வந்தார். ஆனால் இன்று அவர் பிள்ளைகள் அந்த முறைகளிலெல்லாம் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஊரிலும் யாரும் அவர்களிடம் பாண்டுப் பத்திரம் எழுதச் சொல்வதில்லை. நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்த அந்த நாளிலே ஓர் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தேன், என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் பத்திரம் எழுதவேண்டும் என்று சொன்னார், அவர் கணக்கப்பிள்ளையிடம் போனால் அவருக் குப்பத்துப் பதினைந்து ரூபாய்கள் தரவேண்டி இருக்குமென் றும், ஆகவே என்னையே எழுதித்தர வேண்டும் என்றும் சொன்னார். நான் அப்போது வயதில் இளையவனாதலாலும் அவ்வாறெல்லாம் எழுதிப்பழக்கப்பட்டவன் அல்லன் ஆதலா லும் அவ்வாறு எழுத இசையவில்லை. உடனே அவர் என் அம்மாவிடம் சென்று முறையிட்டார். அவருக்குச் சாதகமான முறையில் சில சொன்னார். பாருங்கள், உங்கள் பிள்ளை