பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 1 49 யைப் பத்தாவது வரையில் படிக்க வைக்கிறீர்களே, என்ன பிரயோஜனம்? ஒரு பத்திரம் எழுதத் தெரியவில்லையாம். படிப்பதைக்காட்டிலும் பேசாமல் வீட்டிலேயே இருக்கலாம்' என்றார். என் அன்னையாருக்கு யாராவது என்னைத் தாழ்த்திப் பேசினால் பிடிக்காது. அவர்கள் உடனே கோபம் கொண்டு என்னை அழைத்து அவர் சொல்வது மெய்தானா? என்றார்கள். நான் ஆம்’ என்று சொல்லி மேலும் பேசினேன். 'அந்த மாதிரி எழுதுவது கூடாது' என்றேன். நான் சிறியவ னாதலால் எழுதுவது முறைப்படி தவறு என்றேன், என்றாலும் அன்னையார் கேட்கவில்லை. உன்னைப் படிக்க வைத்தும் எழுதத் தெரியாதவன் என்று சொல்லுகிறார்களே, அதற்காகவாவது நீ எழுதிக்கொடுக்க வேண்டாமா? வெட்க மாக இல்லையா என்று கேட்டார்கள். சரி, அப்படியாயின் எழுதித் தருகிறேன்’ என்றேன். அவர் குறிப்புக்களைக் கொடுத்தார். நானும் விற்பனை வாங்கவேண்டிய வகையில் பத்திரத்தின் நகல் எழுதிக் காண்பித்தேன். அவரும் மற்றவர்களும் பார்த்துப் பார்த்து மிகவும் நன்றாகவும் ஒழுங்காகவும் அமைந்திருக்கிறது என்றார்கள். உடனே என்னையே பத்திரத் தாளில் எழுதச் சொன்னார்கள். நான் இளையவனாய் இருப்பதால் எழுத லாகாது என்பதை விளக்கிச் சொல்லப் பெரும் தொல்லை யாகப் போய்விட்டது. கடைசியில் ஒருவாறு சரி என்றார்கள். வேறொருவர் எழுதினால் குறைந்தது ஐந்து ரூபாயாவது தர வேண்டுமே என்பது அவர் கவலை. நான் அதைக் கண்டேனா? நன்றாகக் கையெழுத்து எழுதும் ஒரு பெரிய வரை வைத்துக் கொண்டு நான் சொல்லிக்கொண்டே வந்தேன். அவர் எழுதி முடித்தார். பிறகு அவர்கள் அந்தப் பத்திரத்தை வாலாஜாபாத்திற்கு எடுத்துக்கொண்டு சென்றார்கள். பத்திரம் ஒழுங்காக எழுதப் பெற்றிருந்தமை யால் யாதொரு தவறும் தடங்கலும் இல்லாமல் ஆவணக்