பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 ஆனந்த முதல் ஆனந்த வரை களரியில் பதிவு செய்யப் பெற்றது. அன்று மாலை அந்தப் பக்கத்து வீட்டுக்காரர் கையில் ஒரு டஜன் சோடாபுட்டிப் பெட்டியுடன் வந்தார். பத்திரம் எழுதி எடுத்துக் கொண்டு உடன் சென்றவரை அவருடன் நான் காணவில்லை. அவர் எங்கே? என்றேன். ‘அதைத்தானே சொல்ல வந்தேன்’ என்று அவரே சொல்ல விரும்பியவர் போலப் பேச ஆரம்பித்தார். நீ சொல்லி யதை அப்படியே எழுதி வந்தான்; கூடவே சாட்சிக்காக அங்கும் வந்தான்; என்னமோ பலகாரம் சாப்பிட்டு வரட்டும் என்று எட்டணா கொடுத்தேன். அவன் குறைந்தது இரண்டு ரூபாய் வேண்டும் என்றான். நான் போடா போ தரமுடியாது என்று சொல்லி விட்டேன். அவன் ஏதேதோ பேசினான். நான் கிடக்கிறது கழுதை என்று வைது விட்டு எட்டணாவை வீசி எறிந்துவிட்டு வந்து விட்டேன். இனி அவன் முகதரிசனம் கூடச் செய்ய மாட்டேன். ஏதோ பெரிய மலையைப் புரட்டியது போல் வாலாட்டுகிறது நாய்' என்று பேசி முடித்தார். எனக்கு உள்ளத்தில் கோபம் பொங்கியது. இவருக்கு உதவியதற்காக அவர் பாவம் நாயாகவும், கழுதை யாகவும் ஆக வேண்டுமா? கணக்குப் பிள்ளை எழுதினால் அவருக்குப் பத்துப் பதினைந்து தரவேண்டும் என்பதற் காகவே என்னிடம் வந்து என் அம்மாவிடம் இல்லாததை எல்லாம் சொல்லி எழுத வைத்தார். நான் ஒன்றும் கேட்க வில்லை. ஆகவே அவருக்கு அந்தப் பத்து ரூபாயும் லாபம் தானே! அதில் அதை எழுதினவருக்கு இரண்டு ரூபாய் கொடுத்தால் என்ன என்று என்னையே கேட்டுக் கொண் டேன். அவரைக் கேட்டால் அவர் இல்லாதையும் பொல்லாத தையும் சேர்த்து அம்மாவிடம் கோள் மூட்டுவார். எனவே நானே நினைத்துக் கொண்டேன். நாங்கள் பேசிக் கொண்டே இருக்கும்போது உள் வேலைகளை முடித்துக் கொண்டு அம்மா வெளி வந்தார்கள். என்ன எல்லாம் முடிந்ததா?’ என்றார்