பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 153 என்று சொல்லி, அந்த வீரர் தம் வீட்டுக்குக் கொண்டு செல் வதைக் கூறி அவரைக் காப்பாற்றினார், சோடா புட்டியும் வெளியில் சென்றது. அம்மா ஆறுதல் அடைந்தார்கள். என்னை அழைத்து இதைப் பார்த்துக் கொண்டாயல்லவா! உனக்கு உரிமை இல்லாததை நீ விரும்பினால் இம்மாதிரி நட்டங்கள்தான் உண்டாகும். சாக்கிரதையாக நட என்று அறிவுரை கூறினார்கள். இதுவரை அவர்கள் சொற்படி கூடிய வகையில் எனக்கு உரிமை இல்லாததை நான் பற்றாமல் வாழவே முயல்கின்றேன். அவர்கள் அருள் நலம் என்னைக் காக்கிறது என்னலாம். 25. ஊழியர் சங்கம் - அந்தக் காலத்தில் நாட்டில் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. உரிமை வேட்கை மீது மக்கள் ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்துப் போராட்டங்கள் தொடங்கினர். நாடெங்கும் உப்பு ச் . சத்தியாக்கிரகம் நடைபெற்றது. அண்ணல் காந்தி அடிகளார் தண்டி சென்று உப்புக் காய்ச்ச முன்னின்றார். தமிழ் நாட்டிலும் வேதாரணியக் கடற்கரை யில் உப்புக் காய்ச்சி அரசியலை மீறும் போராட்டம் நடை பெற்றது. கல்லூரி மாணவர்களும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் அதில் பங்குகொள்ள வேண்டி இருந்தது. பலர் படிப்பை விட்டனர். சிலர் காந்தி அடிகளை நோக்கிச் சென்றனர். இப்படி நாட்டில் பல வகையில் கொந்தளிப்பு சூழ்ந்து கொண்டிருக்கையில் நான் பள்ளி இறுதி வகுப்பில் காலை வைக்க முன் நின்றேன். பள்ளியிலே என்னுடன் நெருங்கிப் பழகும் நண்பர்கள் மிகச் சிலர். நான் யாருடனும் அதிகமாக நெருங்குவதில்லை. ஏனோ என் நிலை அப்படி அமைந்துவிட்டது. அன்றும் சரி இன்றும் சரி நான்