பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154. - ஆனந்த முதல் ஆனந்த வரை யாரிடமும் வலியச் சென்று உறவாடும் வழக்கத்தைக் கொள்ளவில்லை. அவ்வாறு செய்வது சரியில்லை என்றும் நாமே வலியச் சென்று பிறருடன் உறவாடுவதுதான் உலகில் முன்னேற வழி என்றும் பல நண்பர்கள் சொல் வார்கள். அது ஒரளவு உண்மை என்பதைக் கண்டேன்; என்றாலும்,ஏனோ அப்படி மேல்விழுந்து பெறும் தற்பெருமை யான ஆடம்பரத்தை நான் மேற்கொள்ள விரும்பவில்லை. உயர்நிலைப் பள்ளியில் பயிலும் காலத்து எனக்கு நெருங்கிய நண்பர்களாக நான்கைந்து பேர்தாம் இருந் தனர். அவர்களோடு நான் பயிலுவதும், விளையாடுவதும் அரசியல் காரியங்கள் பேசுவதும் உண்டு. உரிமைக் கொந்தளிப்புக்கு இடையிலும் நாங்கள் ஒருசிலர் பங்கு கொள்ள நினைத்தோம். அரசியல் கைதிகளைச் சிறை செய்து நீதிமன்றங்களுக்குக் கொண்டு வரும்போதெல்லாம் நாங்கள் சென்று காண்பதுண்டு. அதனால் எங்கள் ஆசிரியர்கள்-சிறப்பாகக் கணக்கு ஆசிரியர்-அதிகமாகக் கோபிப்பார். இன்று அவர் இல்லை. அன்று உண்மையில் எங்களில் ஒருசிலரின் கல்வி வளர அக்கறை காட்டியவர். ஆகவே நாங்கள் பல சூழல்களுக்கு உட்பட்டுக் கெடலாகாது என்பது அவர் ஆசை. சில சமயம் அவர் என்னை அடித்துக் கூட இருக்கிறார். எப்படி இருந்தும் நாங்கள் அந்த இயக்கத்தில் தீவிரப் பங்கு கொள்ளாவிட்டாலும் ஒய்வு நேரங்களிலெல்லாம் அத் துறையில் பங்கு கொண்டே உழைத்தோம். அவற்றுள் ஒன்றே ஊழியர் சங்கம் என்பது. நாட்டு மக்கள் நல் உணர்வு பெற்று எழுந்து விடுதலைக்குப் பணிபுரியும் அந்நாளில் நாங்களும் ஏதாவது செய்ய வேண்டுமென விரும்பினோம். அந்த நாளில் எங்கள் ஊரிலிருந்து-எங்கள் உயர்நிலைப் பள்ளியில் முன் படித் திருந்து அப்போது சென்னை சென்று பயின்ற சில உணர்ச்சி