பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 155 மிக்க கல்லூரி மாணவர்கள் அரசியலில் தீவிரமாய்ப் பங்கு எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பித்தன் என்ற ஒரு திங்கள் இதழையும் வெளியிட்டு வந்தனர். அவர்களுள் முக்கியமானவர் இந்திய அரசாங்க முன்னைய இரெயில்வே துணை அமைச்சர் ஆவார். அவர் அப்பித்தன்' பத்திரிகை யைக் கொணர்ந்து எங்களை யெல்லாம் அதற்கு உறுப்பினராக்கிச் சென்றதோடு, எங்களையெல்லாம் அதில் கட்டுரை எழுதுமாறும் வற்புறுத்தினார். அந்தப் பத்திரிகை எழுத்துக்களும், நாட்டு நிலையும் ஒன்று சேர்ந்து ஊழியர் சங்கத்தைத் தோற்றுவித்தன என்னலாம். ஊழியர் சங்கத்தில் சேர்ந்தவர் மிகச் சிலரே. பலர் அக் காலத்தில் வெளிப்படையாக அரசியல் எதிர்ப்புக் கழகங் களில் பங்கு கொள்ள அஞ்சுவர். நானும் என் நெருங்கிய நண்பர்கள் சிலருமே அச்சங்கத்தை அமைத்தோம். அவர் களுள்ளும் தலைவராக முன்னின்று அச்சங்கத்தை நடத்த ஒருவரும் முன் வரவில்லை. என்றும் அமைதியாக இருந்த என் உள்ளத்தில் எப்படியோ ஒர் உணர்ச்சி புகுந்தது. 'நானே தலைவனாக இருந்து நடத்துகிறேன் என்று இசைந்து முன் நின்றேன். பள்ளியில் படித்த இரண்டு ஆண்டுகளிலும் அதன் தலைவனாக இருந்து ஒல்லும் வகை பணியாற்றினேன். பல அரசியல் கூட்டங்களில் கலந்துகொண்டேன். இன்று மாணவரை அரசியலில் சேரக்கூடாது என்று கூறும் அதே தலைவர்கள் அன்று அனைவரையும் பள்ளியிலிருந்து வெளி யேறச் சொன்னார்கள். நான் அவ்வாறு வந்ததற்காக தண்டனையும் பெற்றிருக்கிறேன். குடும்பத்தில் உள்ள ஆதரவற்ற சூழ்நிலையையும், நானே முயன்று முன்னேற வேண்டிய முயற்சியையும், பிறவற்றையும் மறந்து, நாட்டு விடுதலை ஒன்றையே முன்னிறுத்திப் படிப்பைக்கூட விட நினைத்துவிட்டேன், எனினும் ஒரளவு ஆசிரியர் தந்த தண்டனைகளையேற்று அமைந்து பயின்றேன். தூய