பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 157 பெற்றேன். என்றாலும் அந்த இறுதி நாளிலும் இயற்கை வழி நான் துன்புறுத்தப்பட்டேன். மலேரியா என்னும் கொடிய நோய் சனவரி மாதத்தில் என்னைப் படுக்கையில் வைத்துவிட்டது. பல பாடங்களை விட்டுவிட்டேன். இறுதி யில் தேர்வு ஒரு மாதம் இருக்கும்போது முயன்று படித்து வெற்றியும் பெற்றுவிட்டேன். இவ்வாறு எனது உயர்நிலைப் பள்ளியில் பயிலும்போதே அரசியல்) அலைகளால் ஒரளவு மோதப்பட்டும், சமூக சீர் திருத்தப் பணியில் ஒர் அளவு இறங்கியும் தொண்டாற்றி, அவற்றால், பாடத்துக்குப் பங்கம் நேராதவாறு பார்த்துக் கொண்டும், என் அன்னைக்கும் பாட்டிக்கும் யாதொரு மனத்தாங்கலும் வைக்காது அவர்கள் மொழிப்படி நடந்தும் என் கல்விக்கு-பள்ளியில் பயின்ற கல்விக்கு-இளமையை முடிக்கும் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். 1931இல் பள்ளி இறுதி வகுப்பில் வெற்றியும் பெற்றேன். இவ்வாறு எனது கல்லா இளமை வாழ்விடை ஒரு கட்டத்தைக் கடந்து தலைநிமிர்ந்தேன். அந்த நாட்களே எனக்கு வழிகாட்டிய பெருநாட்கள். எனவே அவற்றை எண்ணி எண்ணி வாழ்த்துகின்றேன். வாழ்க கல்லா இளமை வளர்க குழந்தை உள்ளம் !