பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4 வாழ்க்கைக் குறிப்புகள் உள்ளன. அந்த வரிசையில் இன்றே னும், ஏதோ ஒருவகையில் என் வாழ்க்கைக் குறிப்பை எழுதி அதன் ஒரு பகுதியையே இன்று உங்கள் முன் வைக்கிறேன். உயிர் வளர்ச்சியின் உச்சியில் வாழ்கின்ற மனிதன் தன் வாழ்வினைப் பிற உயிர்களின் வாழ்க்கையோடு, பிறமக்களின் வாழ்க்கையோடு, சமுதாய உணர்வோடு எண்ணிப் பார்ப்பா னாயின் உலகில் இன்று நடைபெறுகின்ற பல போராட்டங்கள் இல்லையாகக் கழியும். இன்றைய உலகில் மனிதன், பல பேரறிஞர்கள் சுட்டிக் காட்டுவதுபோன்று, மனித உணர்வை விட்டு விலங்கு உணர்வினை மேற்கொண்டு எங்கோ சென்று கொண்டிருக்கிறான். இந்த உணர்வினால் பல உண்மைகள் மங்கி மடிகின்றன. உதாரணமாக ஒன்றைமட்டும் இங்கே சுட்டிக்காட்ட நினைக்கின்றேன். இலஞ்ச ஒழிப்புப் பற்றி அரசாங்கம் தீவிரமாகப் பிரசாரம் செய்ய, சில மேல் நிலையில் உள்ள அமைச்சர்களும் ஒரு சில உயர் அதிகாரிகளும் உண்மை யில் கைநீட்டாத நல்ல கடப்பாட்டில் வாழ்கின்றார்கள். என்றாலும் இலஞ்சம் அங்கிங்கெனாதபடி', ஆண்டவனைப் போல் தெளிவாகக் காட்ட முடியாததாய் நிலவுகிறது. இப்படியே பிறவகைகளும். இத்தகைய கொடிய சூழலில் மனிதன் சிக்கி வாழும்போது, அவன் சுயவாழ்வு ஒரு கேடா' என்று கூட நினைக்கத் தோன்றுகின்றது. எனினும் ஒருசிலர் என்றாயினும் உண்மை உணர்ந்து, நேர்மை, நாட்டிலும் நிலவுலகிலும் நிலவாதா என்ற உணர்விலேயே பல நல்ல நூல் களை நாட்டில் உலவ விடுகின்றனர். வள்ளுவர் காலம் தொடங்கிக் காந்தி அடிகள் காலம்வரை எத்தனையோ அறவோர்கள் எழுதிவைத்த அத்தனையையும் படித்துக் கொண்டே, பேசிக்கொண்டே, அவர்களைப் பற்றிய மகா நாடுகளை நடத்திக் கொண்டே, மனிதன் தன் மாறுபட்ட வழியிலேதான் சென்று கொண்டிருக்கிறான். இந்த நிலையில் இத்தகைய நூல்கள் தேவையா என்ற எண்ணம் என்