பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 167 செங்கற்பட்டில் பள்ளி இறுதிவகுப்பு எழுதியதும் அங்கிருந்த வாடகை வீட்டைக் காலிசெய்ய ஏற்பாடு செய்து விட்டார்கள் என் அன்னையார். ஆம்! தேறினால் அங்கே மேலே பயில வாய்ப்பு இல்லை. தேறாவிட்டாலோ மறுபடி படிக்கக் கூடாது. இது என் அன்னையின் ஆணை. நான் எந்த ஆண்டு தேர்வில் தேறவில்லையோ அந்த ஆண்டில் வீட்டில் நின்றுவிடுகிறேன்’ என்று வாக்களித்திருந்தேன். எனவே அன்னையார் தன் அன்புளங் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நான் வெற்றிபெறக்கூடாது என்றே ஆண்டவனை வணங்குவார்கள். அவர்களுடைய ஆசை எல்லாம் நான் வீட்டிலேயே அவர்களோடு இருக்கவேண்டும் என்பதுதான். எனினும் பள்ளி இறுதிவகுப்பில் தேறினும் தேறாவிடினும் அதுவே எனது கடைசிப் படிப்பு என்ற முடிவில் செங்கற்பட்டு வீட்டைக் காலிசெய்துவிட்டோம். படிப்பு முடிந்து பதினேழுவயதான நிலையில் நான் என்ன செய்வது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். என் பாட்டியும் மறைந்துவிட்டமையின் நானும் அன்னையும் மட்டுமே வீட்டில் தனிமையில் சிலநாட்கள் வாழ்ந்திருந் தோம். ஏதோ ஒரளவு சொத்து உடையவர்கள் என்ற காரணத்தால், எனக்குப் பெண்கொடுக்க நினைத்தார்கள் சிலர். ஒருவர் அதில் தீவிரமாக முயன்றார். பாவம் அவர் பெண்ணின் இளமை நிலையையும்-அதே வேளையில் அவர் தமது உள்ள நெகிழ்வையும் உணராமல் எனக்கு அவர் பெண் ணைக் கொடுக்கத் திட்டமிட்டார். நானும் அப்பெண்ணை அடிக்கடி காணநேர்ந்தமையின் ஒரளவு அவர் திட்டத்துக்கு ஆதரவானேன். எங்கள் எதிர்வீட்டிற்கு இரண்டு வீடு'தள்ளி ஒரு வீட்டில் குடியிருந்தவரும் இந்தப் பணியில் ஆர்வங் காட்டினார். என்னை அவர் வீட்டிற்கு அடிக்கடி வந்து அழைத்துப்போவார். என் அன்னையார் மட்டும் அவ்வாறு அடிக்கடி ஒருவர் வீட்டிற்குப்போதல் தவறு எனக் கண்டிப்