பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 ஆனந்த முதல் ஆனந்தவரை விரும்பினாலும் வாய்ப்பின்றி இருப்பதை அறிந்தார். எனவே அவர் வீட்டிற்கு உணவுகொள்ளவந்த காலை, என் அன்னை யாரோடு என்னைப் பற்றிப் பேசினார். என்னிடமும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து என் உள்ள் நிலையினையும் புரிந்துகொண்டார். அவருக்கு, நான் பிற்காலத்து உயர்ந்து வாழ்வேன் என்று புலனாயிற்று என்றார். எனவே எனது மேல் படிப்புக்கு என் அன்னையாரிடம் அவரே வாதாடினார். மேலும் வீட்டில் இருந்துகொண்டே-அன்னையார் விருப் பினை நிறைவேற்றிக்கொண்டே-படிக்க வாய்ப்பு உண்டு என்றார். சிதம்பரத்துக்குப் பக்கத்தில் உள்ள கல்லூரியில் தேர்வு எழுதலாம் என்றும், அதற்கு வீட்டில் இருந்து கொண்டே படிக்கலாம் என்றும் சொன்னார். தமிழ் வித்து வான் பட்டம் பெற மேலே படிக்க வாய்ப்பு உண்டு என்றார். அதற்கு முதலாக நுழைவுத் தேர்வுக்கு உரிய நூல் பெற்று அப்போதே படிக்கத் தொடங்கலாம் என்றார். மீனாட்சி காலேஜ்' என்று இருந்தது பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகமாக மாறியுள்ளதென்றும் அதற்கு எழுதினால் எல்லாத் தகவல்களும் அனுப்புவார்களென்றும் அவர் சொன்னார். தேவையானால், சிதம்பரத்தில் தங்க வேண்டுமானால், தாம் நிலையாக உள்ள மெளன. சுவாமிகள் மடத்தில் தங்கலாம் என்றும் வழி காட்டினார். எதற்கும் இசையாத என் அன்னையார், நான் வீட்டிலேயே இருந்து படிக்க வாய்ப்பு உண்டு என்று சொன்ன காரணத்தால், அந்த வித்துவான் நுழைவுத் தேர்வு எழுத இசைவு தந்தார்கள். நானும் உரிய நூல்களைப் பெற்றுப் படிக்கத் தொடங்கினேன். என்னுடை தமிழ்ப் படிப்பு தொடங்கிவிட்டது. ஆட் கொள்ள வந்த வள்ளலாம் பிரகாச ஆனந்தர்' என்னைத் திசைமாறச் செய்தார். ஆம்! அந்த மாற்றமே இன்று என்னை ஓரளவு தமிழ் அறிந்தவனாக உலகுக்குக் காட்டு கிறது. அன்னைத் தமிழுக்கு நான் ஆக்கப்பணி செய்கி