பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 ஆனந்த முதல் ஆனந்த வரை வெகுள்வார். அவ்வாறு உண்டான ஒரு வெகுளியின் காரணமாகவே நான் இடையில் அண்ணாமலையில் பயில் வதை நிறுத்தி வந்துவிட்டேன். அவர் என்னிடம் அன்பு பொழிந்தார் என்றே சொல்லவேண்டும். அவர்தம் துறவு உண்மைத் துறவாகும். இவர்களைத் தவிர சிவப்பிரகாசர், கல்யாணசுந்தரம் பிள்ளை, பலராமையா, பழநியப்பப்பிள்ளை போன்ற நல்ல அறிஞர்கள் அதுகாலை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தே அணிசெய்து விளங்கினர். அப்புலவர் கூட்டத்தை ஆசிரியர் அறையில் ஒருசேரக் காண்பதே கண்கொளாக் காட்சியாக விளங்கிற்று. அத்துணை அறிவாற்றல் மிக்க ஆசிரியர் அனைவரும் எங்கள் தொடக்க வகுப்பிற்கும் பாடம் எடுத்து எங்களுக்கு அறிவு கொளுத்திய தன்மையை எண்ணி எண்ணி வியந்ததுண்டு. விபுலானந்த அடிகளார் தொடங்கிக் கடைசி ஆசிரியர் வரையில் எங்கட்கு வந்து பாடம் நடத் தினர். அவர்கள் தந்த பிச்சைதான் இன்று ஓரளவு நான் "தமிழாசிரியன் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை எனக்கு உண்டாக்கிற்று என்பதில் ஐயமில்லை! அவர்கள் அனைவரும் என் உள்ளத்து உறையும் தெய்வங்களாவர். நான் பயின்ற முதலாண்டில் விபுலானந்த அடிகளார் தலைவர் என்றேன். ஆம்! எப்படியோ நான் அவரோடு நெருங்கிப் பழகினேன். அவர்கள் மேற்கொண்ட சில சமுதாயச் சீர்திருத்தப் பணிகளில் பங்கும் கொண்டேன். அதுகாலை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி இன்னும் என் நினைவில் உள்ளது. ஒருநாள் அடிகளாரும் மாணவர் சிலரும் அருகில் உள்ள ஒரு சேரிக்கு, அதைத் தூய்மைப்படுத்திக் குழந்தைகளுக்குத் தின்பண்டம் தருவதற்காகச் சென் றோம். வடை, சுண்டல் இவற்றை இரு கூடைகளில் எடுத்துச் சென்றோம். அப்போது திருவேட்களம் திருக்கோயிலின் பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒருசிறுவனும் எங்க