பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 183 காட்டிச் சென்றதை நான் தவறாக உணர்ந்துவிட்டேன். போலும். முயன்றால் அவர்களை மணக்கலாம் எனத் திட்ட மிட்டேன். ஆயினும் இம்மணத்தை என் அன்னையாரோ மற்றவர்களோ ஒருசிறிதும் விரும்பமாட்டார்கள் என்பதை அறிவேன். என்றாலும் ஏனோ அந்த வாலிப உள்ளத்தில் அந்த எண்ணம் முகிழ்ந்தது. ஓரளவு முயற்சியும் செய்தேன். அவர்களும் இணங்கும் நெறியில் வந்தார்கள் என நான் கருதினேன். ஆனால் மணம் புரிந்துகொள்ளவேண்டும் என்ற என் கருத்தை எழுத்தில் தீட்டிய நாளிலிருந்து அவர்கள் போக்கு திசைமாறிவிட்டதால் நான் என் எண்ணத்தை அறவே விட்டுவிட்டேன். (பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து என் அன்னையர் விருப்பப்படியே உறவினர் ஒருவரை மணந்து கொண்டேன்.) எனினும் அவர்தம் பிற்கால வாழ்க்கையை நோக்கும்போது, ஒருவேளை நான் அடுத்த இரண்டொரு ஆண்டில் முயன்றிருந்தால் எண்ணம் நிறைவுற்றிருக்கலாம் என நினைத்ததுண்டு. நான் இடையில் பல்கலைக்கழகப் படிப்பைவிட்டுவிட்டமையின் அவர்களைக் காண வாய்ப்பு. இல்லை. பல ஆண்டுகள் கழித்து அவர்தம் இருக்கையை யும் வாழ்க்கைமுறையும் அவர்தம் வாழ்வின் இழப்பையும், பிறநிலையையும் நோக்கும்போது என் உள்ளம் என்னை அறியாது அவர்கள்பால் வெறும் உயிர் இரக்கம் காட்டும் வகையில் அமைந்தது; அவ்வளவே! பல்கலைக் கழகத்தில் பயிலும்கால் அடிக்கடி ஊருக்கு வருவேன். அவ்வாறு ஒருமுறை வந்தபோது சென்னை சென்றேன். அப்போது எனக்குத் தேவையான சில நூல்கள் வாங்குவதற்காக டாக்டர் சாமிநாதையர் வீட்டிற்குச் சென்றேன். நடையில் உட்கார இடம் இருந்தது. உள் வாச லில் பாத்திரங்கள் துலக்கி வைக்கப்பெற்றிருந்தன. ஐயர் அவர்கள் - எழுபத்தைந்துக்கு மேல் வயதிருக்கும்-அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து உள்ளே வைத்து வந்தார். என்னை