பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 ஆனந்த முதல் ஆனந்த வரை வேளாளர்கள்தாம். எனினும் சிறுவேறுபாடு இருக்கும் போலும், அவர்களும் வைதிக நெறிபற்றியவர்கள் போலும். ஆனால் பின் இருவரும் ஒரே இனத்தவர்தாம் என உணர்ந் தனர். அத்தகைய திருமணம் செய்ய அந்த ஊரில் யாருமே நினைக்கமாட்டார்கள் என்றும் ஊரில் அவ்வளவு கட்டுப்பாடு உண்டு என்றும் பத்திரிகையில் உள்ளமை போன்று பெண்ணோ அவள் அண்ணனோ கிடையாது என்றும் கூறியதோடு, ஒரு வேளை அடுத்து அத்தகைய மணம் ஏதேனும் நடந்தாலும் தாங்கள் நடக்க ஒட்டாத கொள்கை யுடையவர்களென்றும் கூறி, அன்னையாரைக் கவலை கொள்ளாது செல்லுமாறு வழியனுப்பிவைத்தார்களாம். அவர்கள் அன்பில் திளைத்த அன்னையாரும் வேற்றுடம்பு திரும்புவது போன்று, என்னைக் காணாமையால் வந்தவழி திரும்பினார்கள். இவற்றையெல்லாம் என் அன்பர் கூறக்கேட்டு நான் கதறி அழுதேன். அன்னையை இத்தனை அல்லலுக்கு இச் செயல் உள்ளாக்கும் என அறிந்திருந்தால் அதை மேற். கொண்டே இருக்க மாட்டேன். எனினும் இதனால் பயன் விளையும் என்று எதிர்பார்த்த இடத்தில் பயன் விளைய வில்லை என அறிய மேலும் நடுங்கினேன். இச்செய்தியைக் கேட்ட என் மாமனார் வீட்டில் உள்ள அனைவரும் ஒரு சனியன் விட்டது என்று கூறியதோடு. மகிழ்ச்சியோடு வேறு பல பேசினார்கள். அவர்கள் கவலை கொண்டதாகவே தெரியவில்லை. ஆம்! அவர்கள் அனைவருக்கும்-அந்த மனைவி உட்பட அனைவருக்கும் நான் ஒரு சனியனாகவே இருந்தேன். இன்று அவருள் வாழ்வார்க்கும் அப்படியே இருக்கிறேன். - குணமங்கலத்தை-எனது கற்பனை ஊர் உண்மையாக நின்ற நல்லூரை-அன்று முதல் காணவேண்டும் என்று எண்ணுவேன் . ஆயினும் பல ஊர்களைச் சுற்றித் திரிந்த எனக்கு அந்த ஊருக்குச் செல்ல வாய்ப்பு இல்லை. இன்னும்,