பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 - ஆனந்த முதல் ஆனந்த வரை எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கின்றது என்றும் படியாமல் வீணே காலங் கழிக்கக் கூடாது என்றும் சென்னையில் பல்கலைக்கழகத்துக்குத் தனியாகப் படித்துச் செல்லலாம் என்றும் கூறி அவ்வாறு படிப்பதற்கு வேண்டிய வழித்துறை களில் எனக்கு உதவுவதாகவும் வாக்களித்தார். அவர் சொற் படி நான் படித்து உயர்ந்தபோது என் வளர்ச்சியைப் பாராட்டினார். ஐதராபாத் உஸ்மானியப் பல்கலைக்கழகப் பேராசிரியனாகத் தமிழக அரசாங்கம் என்னை அனுப்பிய போது, அங்கே என்னை வரவேற்று விருந்தளித்துப் பல பெரியவர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். என் வளர்ச்சியை விரும்பும் நல்லவர்களில் ஒருவராக அவர் உள்ளார். இவ்வாறே எனக்கு அறிமுகமான பலரும் எனக்கு அறிவுரைகூறி, மேலே படிக்கவேண்டும் என்று வற்புறுத்தினர். என் அன்னையாருக்கும் நான் வீட்டிலேயே இருந்து படித்துப் பட்டம் பெறுவதில் கருத்துவேறுபாடு இல்லை. எனவே என் ஒய்வுநேரங்களில் சென்னைப் பல்கலைக்கழகப் பாடத் திட்ட அடிப்படையில் அமைந்த சில இலக்கிய இலக்கண நூல்களைப் பயிலத் தொடங்கினேன். தமிழ்த்துறையில் வல்லவர்களாய் எனக்கு வழிகாட்டிகளாய் நிற்க அங்கே யாரும் இல்லையேனும் நானே பல நூல்களை வாங்கி வைத்துக்கொண்டு மெல்லமெல்லச் இரு ஆண்டுகள் படித்துக் கொண்டே வந்தேன். ஒராண்டு பள்ளியில் பணி செய்த பிறகு வீட்டிலேயே தங்கி, அதிகமாகப் பயில வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டேன். அங்கங்கே நடக்கும் அறிஞர்கள் கூட்டங்களுக்குச் சென்று கலந்துகொண்டு அறிவுரைகளைப் பெற்று வருவேன். ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாகச் கழிந்தாலும் என் இல்வாழ்வில் எத்தகைய மாற்றமும் எற்படவில்லை. மணம் நடைபெற்று ஐந்தாறு ஆண்டுகள் கழிந்தபோதிலும் ஒருதர