பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 . ஆனந்த முதல் ஆனந்த வரை வேண்டும் என முடிவு செய்தேன். நல்லவேளை அன்னை யாரிடம் மறுநாள் காலையில்தான் வருவேன் என்று சொல்லி வந்தது பொருத்தமாயிற்று. உடனே இரெயிலைப் பிடித்து மறுநாள் காலை வாலாஜாபாத் அஞ்சல் நிலையத்தே அந்தக் கடிதத்தை நானே வாங்கிக் கிழித்துப்போட வேண்டு மென முடிவு செய்தேன். ஒன்றும் சாப்பிடவில்லை; சாப்பிட மனமும் செல்லவில்லை. விடியற் காலை 3-30க்கு இரெயில் என்றனர். எனவே இரெயிலடியில் வந்து படுத்துக் கொண்டேன். உறக்கம் வரவில்லை. பம்பாய் மெயில்’ 3.30க்கு வந்தது. அரக்கோணத்தில் சிறிது நேரம் தங்கி, செங்கற்பட்டு வண்டியைப் பிடித்து வாலாஜாபாத்திற்கு காலை எட்டு மணிக்கு வந்து சேர்ந்தேன். நான் எழுதிய தபாலும் அதே வண்டியில்தான் வந்துகொண்டிருக்கும். பள்ளியில் சிறிது நேரம் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்து பிறகு அஞ்சலகம் சென்றேன். எங்களுருக்கு ஒரு வயதான ஐயர் அக்காலத்தில் தபால் கொண்டுவருவது வழக்கம், அவரிடம் சென்று என் அம்மாவின் பெயருக்குத் தபால் வந்திருக்கிறதா?’ என்று கேட்டேன். அவர் உடனே அந்த உறையை எடுத்து என்னிடம் கொடுத்தார். உடனே ஒரு பெரு மூச்சு வந்தது. இன்னும் சில மணி நேரத்தில் அது அன்னை யின் கையில் சேர்ந்திருந்தால் என்னவாயிருக்கும் என எண்ணியபோது நடுக்கமே உண்டாயிற்று. அக்கடிதத்துடன் விரைந்து ஊருக்குப் புறப்பட்டேன். வழியில் சாலை ஓரத்தி லுள்ள மரநிழலில் உட்கார்ந்து அக்கடிதத்தை இரண்டு மூன்று முறை படித்தேன். முன்னாள் இருந்த மனநிலைக்கும் அப்போ தைய மனநிலைக்கும் பெரிய வேறுபாடு தெரிந்தது. அதை உடனே கிழித்துவிட எண்ணினேன். எனினும் சிறிது காலமாவது அது இருக்கட்டும் என்ற தெளிவோடு அதை எடுத்துக்கொண்டு அமைதியாக வீடு சென்றேன். மறுநாட்காலையில் வந்துவிட்டதால் அன்னையும் என் னிடம் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. நான் தணிகை