பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 217 காஞ்சிபுரம் கற்றார் வாழ் காஞ்சி எனப் போற்றப் பெறினும் மற்றாரும் அதில் மலிந்திருந்தனர்-இருக்கின்றனர். அங்கே நடந்த-நடக்கும் பல கொடுமைகளை அன்றும் பாடினர். இன்றும் பார்க்கின்றனர். அதே வேளையில் பெரும் பாணாற்றுப்படையும் மணிமேகலையும் பிற பிற்கால இலக்கியங்களும் காஞ்சியின் புகழ்பாடுவதைக் கேட்டுள் ளோம். எனினும் என் அன்னை யாருக்குக் காஞ்சிபுரம் என்றாலே நடுக்கம், பதியிலாக் குலத்துவந்த பான்மையார் பலர் அக்காலத்து, காஞ்சியில் இருந்தமை முக்கிய காரணம். மேலும் எங்கள் உறவினர் பலர் காஞ்சியில் வாழ்ந்து கெட்டனர் எனக் காட்டினர் அன்னையார் இந்த நிலையில் அவர்கள் என்னைக் காஞ்சிபுரம் செல்ல விடுவார்களா என்பது ஐயத்துக் குரியதேயாகும். அதிலும் தனியாகச் சென்று ஒட்டலில் உண்டுகொண்டு இருக்கச் சம்மதிக்க மாட்டார்கள். அவர்களோ பிறந்த மண்ணைவிட்டு வர மாட்டார்கள். பெரிய அன்னையாரோ, பெரிய தந்தையார் இறந்து ஓராண்டு கழியுமுன் வெளிவரல் இயலாது. எனவே பெரும்பாலும் இசைவு கிடைக்காது என்றே எண்ணினேன். என் அன்னையாரிடம் இதுபற்றிச் சொன்னபோது, அவர்கள் ஊரிலேயே பயிர்த் தொழிலைச் செய்யலாம் என்றார்கள். ஆனால் அதே வேளையில் நான் பிறந்த மூன்றாம் நாளில் எனது சாதகத்தை’க் கணித்த ஊர் வள்ளுவர் இவர் உத்தி யோகத்தில்தான் இருப்பாரே யன்றி உழவுத் தொழில் செய்ய மாட்டார்' என்று கூறியதையும் நினைவூட்டினார்கள். எங்கள் குடும்பத்தில் நான்கைந்து தலைமுறையில் யாரும் படித்து உத்தியோகத்துக்குப் போகவில்லை. எனவே அந்தச் சோதிடன் சொன்னது பலிக்கும் என யாரும் நம்பவில்லை. ஆயினும் பிறகு நடந்த பல நிகழ்ச்சிகளையும் அவர் அந்தப் பிறந்த மூன்றாம் நாளில் எழுதியதையும் ஒத்து நோக்கும் போது அவர் எழுதிய அனைத்தும் சரியாக உள்ளமை அறிந்தோம். எனக்குச் சோதிடத்தில் நம்பிக்கை உண்டோ