பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 ஆனந்த முதல் ஆனந்த வரை உறவினர் ஒருவரின் மகளையே மணம் பேசினர். அவர் களையே முன்னரே எனக்கு மணம் முடிக்க இருந்தார் களென்றும் என் விருப்பப்படிதான் வேறுஇடத்தில் முந்திய மணம் முடிந்ததென்றும் பிறகு அறிந்தேன். இந்த மண ஏற்பாட்டிலும் அவர்கள் சிறிதும் மனம் வருந்தியதாகவோ மாறுபட்டதாகவோ காணவில்லை. எனவே என் அன்னையார் முடிவே சரியென அனைவரும் கூறினர். அவர்கள் அனைவரும் முன்னின்று மணத்தை ஏற்பாடு செய்தனர். என் சாதகக் குறிப்பிலும் அதுபற்றிக் குறித் திருந்தது. எனவே அனைவர் விருப்பினை ஏற்றும், குடிநலம் புரக்கக் கருதியும் மணத்துக்கு இசைந்தேன். ஆம் அந்த மணமும் நல்ல வேளையில் நடைபெற்றது. மணம் நடந்த அதேவேளையில் அந்த ஊரில் ஒருவீட்டில் ஒர் ஆண்மகவு பிறந்தது. அதன் தந்தை என்னிடம் ஈடுபாடு கொண்டமையாலோ ஏனோ அக்குழந்தைக்கு என் பெயரையே இட்டார். இது நெடுநாட்களுக்குப் பிறகே எனக்கு தெரிந்தது. அவரோ மற்றவரோ அப்பெயர் பற்றி எனக்குக் கூறவில்லை. ஆயினும் சில ஆண்டுகள் கழித்து என் பெயரைப் பற்றிய ஆராய்ச்சி உக்கலில் வேடிக்கையாக நடைபெற்றபோது, அந்த உண்மை வெளியாயிற்று. என் பெயர் எங்கும் வேறுயாருக்கும் கிடையாது என வாதிட்டேன் நான். பரமசிவம் சிவானந்தம் "பரமானந்தம் ஆனந்தம்’ போன்று பலபெயர்கள் இருக்கலாம் என்றாலும், 'பரமசிவானந்தம்' என்ற முழுப்பெயர் யாருக்கும் கிடையாது என்றேன். அந்தப் பிள்ளையினுடைய தந்தையாரும் உடன் உட்கார்ந்திருந்தார். அவர் அமைதியாகத் தம்மகனுக்கும் அப்பெயரிட்டிருப்பதையும் காரணத்தையும் காட்டினார். என் மணம் நடந்த அதேவேளையில் பிறந்தமையாலும் இளமையிலேயே தன் முயற்சியால் நான் முன்னுக்கு வந்துள்ளதாக அவர் கருதியமையாலும் அப்பெயரை