பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 ஆனந்த முதல் ஆனந்த வரை அது ஏற்றதாக இருந்ததாகவும், அவ்வளவு இருந்தும் நான் வேறு திசையில் சென்றதால் அது தடைப்பட்டு, நான் முன், வேறுமணம் செய்ய நேர்ந்ததாகவும் கூறி, அக்கோபமே அந்தச் செயலாக உருவெடுத்ததெனக் காட்டி, மன்னிப்பு வேண்டிய நிலையில் உண்மை உணர்ந்து உளம் தேறினேன். அடுத்த ஆண்டு வாழ்வு-காஞ்சியில் இரண்டாம் ஆண்டு வாழ்வு- என் இல்லற வாழ்வாகத் தொடங்கியது. என் பெரிய அன்னையாரும் உடன்வந்து எங்கட்கு உதவியாக இருந்தார். என் இல்லறவாழ்வு காஞ்சி அரசவீதியில் ஒரு வீட்டில் தொடங்கியது. நான் குடிசென்ற பிறகுதான் அந்த வீட்டின் சிறப்பை உணர்ந்தேன். 'கச்சி உலா'வில் அதன் ஆசிரியர், இறைவன் உலாவரும் தன்மையைக் கூறிக்கொண்டு வருகின்றபோது, இறைவனாம் ஏகம்பன் மாடவீதிகள் மூன்றைக் கடந்து பின், கச்சபாலயம் கடந்து, கம்பன் வீடு தாண்டி, குமரகோட்டம் தாண்டிச் சென்றதாகக் குறிக் கின்றார். ஆகவே கம்பன் வாழ்ந்த வீடு காஞ்சிபுரம் அரச வீதியில் கச்சபாலயத்துக்கும் குமர கோட்டத்துக்கும் இடை யில் இருந்தது என்பது தேற்றம். அக் 'கம்பன்' என்ற பெயரே 'ஏகம்பன் என்ற காஞ்சியிற் கடவுள் பெயரின் முதற் குறை என்றுதானே அறிஞர் காட்டுவர். எனவே கம்பர் காஞ்சியில் வாழ்ந்தார் என்று கொள்வதில் தவறு இல்லை. கற்றார் வாழ் காஞ்சி கம்பர் வாழ்ந்ததால் பெருமையுற்றிருக்கு மன்றோ! ஆம்! ஆனால் அவர் எந்த வீட்டில் வாழ்ந்தார்? அதைத்தான் உலா உணர்த்துகின்றது. அவர் வழி பாடாற்றிய கலைமகளும் இன்னும் அங்கேயே இருக்கிறாள். தெருவின் மேலண்டை வாடையில் உயர்ந்து வளர்ந்த வேப்பமரத்தின் அடியில் அக்கலைமகள் வீற்றிருக்கிறாள். இன்றும் பலர் அவருக்கு வழிபாடாற்றுகின்றனர்.