பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 21 சொல்லாமல் அப்படியே செய்துவிட்டு வந்தார்கள். அதற்குள் என்னை வளர்த்த பாட்டி-தாத்தாவுக்கு அக்கா. காமாட்சி அம்மாள் எங்கிருந்தோ அதட்டல் கேட்டு வந்தார் கள். ஏன் இப்படிக் குழந்தைகளை அதட்டுகிறாய்?" என்று பரிவோடு கேட்டார்கள். - 'ஏனா? அவள் ஏன் அந்த விறகை எடுத்தாள்? அந்த இலுப்ப விறகு கோயில் விறகு என்று தெரியாதா? நம் விறகு தொழுவத்தில் இருக்கிறதே, பொழு தோடே முனியனை எடுத்துவரச் சொல்வதுதானே என்றார்கள், அப்போதுதான் எல்லாருக்கும் புரிந்தது. கோயில் விறகை உலர்த்திக் கோயிலுக்குக் கொண்டு செல்வதற் காக எங்கள் பழைய பெரியவீட்டுத் திண்ணையில் அடுக்கி வைத்தார்கள். எங்கள் விறகு எல்லாம் பக்கத்தில் தொழு வத்தில் அடுக்கி இருக்கும். அம்மா இது தெரியாது அவசரத் தில் கோயில் விறகை எடுத்து வந்துவிட்டார்கள். நாம் எவ்வளவுதான் கோயிலுக்குத் தானம் கொடுத்தாலும் அக்கோயில் சொத்தில் ஒரு சிறு துரும்புகூட நமக்குப் பயன் படலாகாது' என்ற கொள்கையில் தாத்தா தீவிரமாக இருப்ப வர்கள். (அவர்கள் நிலத்தை மூன்றாய்ப் பிரித்து ஒன்றைக் கோயிலுக்கும் இரண்டை இருமக்களுக்கும் வைத்தார்கள் என்பர் ஊரார். இன்றும் அவர்கள் ஏற்படுத்திய பல நிபந்தங்கள் ஊர்க் கோயிலில் நடைபெற்று வருகின்றன.) இப்படிச் சிலச்சில நாட்களில் நான் கேட்டுக்கொண்டிருக்கும் கதைகளில் தடை ஏற்படுவதும் உண்டு. ஆயினும் அந்தக் கிளிக்கதை மட்டும் அப்படியே மனத்தில் நின்றுவிட்டது. கிளிகள் கூட்டம் கூட்டமாகச் சஞ்சரிக்கும் காடு. அக் காட்டில் அக்கிளிகளைக் கண்ணி வைத்துப் பிடிக்கும் வேடர் களும் சுற்றிக்கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ஒரு வேடன் வலையை விரித்துக் கீழே தானியங்களையும் பழத்துண்டுகளை யும் தூவிவிட்டு ஒரு புதரில் மறைந்திருந்தான். எங்கிருந்தோ கிளிகள் கூட்டமாகப் பறந்தோடி வந்து வலைவிரித்திருந்த