பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 229 கம்பர் அக்கலைமகளை வழிபட்டுக்கொண்டு அந்த வீட்டிலேயே குடி இருந்தார் என்று அறிஞர் கூறினர். அது எந்த வீடு? ஆம்! நான் குடியிருந்த வீடே அது. அந்த வீட்டின் வாயிலிலேயே அக்கலைமகள் வேம்பின் அடியில் காட்சி தருகிறாள். இன்றும் எப்போதாவது அந்தப்பக்கம் செல்வேனாயின் என்னையுமறியாது என் கரங்கள் அத் தெய்வத்துக்கு அஞ்சலிசெய்யும்-மனம் வழிபாடாற்றும். அன்றுதொட்டு நான் எங்கே குடிபோனாலும் சொந்த வீடு கட்டினாலும் வீட்டின் புறத்தே வேம்பினை நட்டு வளர்த்து வருகிறேன். அதன்கீழ் உள்ள கலைமகள் எனக்குத் தோன்றாத் துணையாய் அமைகிறாள் என நம்புகிறேன். நான் அரச வீதியில் தங்கிய ஞான்று எனக்குப் பல புதிய அன்பர்கள் நண்பராயினர். பச்சையப்பர் உயர் நிலைப் பள்ளியில் பணியாற்றிய திரு. துரைசாமி ஐயர் என்பார் அவருள் ஒருவர். அவர்தம் காலங்கடவாக் கடப்பாடும், பழகும் முறையும் பண்பும் என் உள்ளங்கவர்ந்தன. காஞ்சியில் நெடுங்காலம் பொதுப்பணி செய்து சிறந்த பரமசிவ முதலியாரும், அவர் மகனார் கலியான சுந்தரனாரும் எனக்கு அறிமுகமாயினர், முன்னரே வாலாஜாபாத் வா.தி.மா. அவர்களால் அறிமுக மான கச்சபாலயமுதலியார் நெருங்கிய அன்பரானார். அவரே நான் முதல் முதல் உபயோகப்படுத்த சிறு நாற்காலியும் மேஜையும் செய்து தந்தார். அம்மேசையை நான் இன்னும் சென்னையில் பயன்படுத்தி வருகிறேன். நான் பணியாற்றிய ஆண்டர்சன் பள்ளித் தலைமை எழுத்தர் திரு. தேவராச முதலியார் என்பவர் அந்தப்பக்கத்தில் வாழ்ந்தவர்தாம். அவர் அடிக்கடி வீட்டிற்குவந்து வேண்டிய உதவிகளைச் செய்வார். அவருடன் பள்ளியிலும் நல்ல பயனுள்ள பல பணிகளைச் செய்ய முடிந்தது. ஆண்டு தோறும் பள்ளி ஆண்டுவிழாவில் அவரது முயற்சியால்