பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 ஆனந்த முதல் ஆனந்த வரை நாடகங்கள் நடைபெறும். அடுத்த வீட்டிலிருந்த இராசம் செட்டி8 சன்ஸ் உடன் பிறந்தார் எனக்கு உற்றுழி உதவினர். இன்னும் உதவிய அன்பரும் மாணவரும் பிறரும் பலர். அத்துணை நல்லவர்களோடு நான் காஞ்சியில் ஒருசில ஆண்டுகளே பணியாற்றினேன் என்றாலும் அக் காஞ்சி வாழ்வு என் நாட்களில் என்றும் ஒளிவிடும் தொடக்க நல்வாழ்வாக அமைந்துவிட்டது. 6. அரசியல் அலைகள் : தேர்தலும் தெளிதலும் நான் காஞ்சியில் வாழ்ந்திருந்த காலம் ஓர் அரசியல் மாற்ற காலம். ஆங்கிலேயர் மக்களுக்கு ஒரளவு சுயஆட்சி நல்கி ஆங்காங்கே தேர்தல் நடத்தி, சட்டசபைகளை அமைத்து, அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்த காலம். இந்தியா முழுவதிலும் அந்தக் கொந்தளிப்பும் தேர்தல் ஆரவாரமும் நிறைந்திருந்தன. நான் செங்கற்பட்டுப் பள்ளியில் பயின் றிருந்த காலத்தில் என் இளமையின் நினைவில் குறித்தபடி, ஒருபுடை அரசியலிலும் மேல்போக்காகப் பங்கு கொண்டிருந் தேனாயினும் பிறகு அதில் தலையிடவில்லை. எனினும் காஞ்சி வாழ்க்கை என்னைத் தலையிட வைத்துவிட்டது. தமிழகத்தில் எங்கும் தேர்தல் முழக்கம். காங்கிரஸ் நாடெங்கும் பெருவெற்றி பெற்றமை போன்றே இங்கும் பெற்றது. அதன்பயனாக திரு. ச. இராசகோபாலாச்சாரியார் அவர்கள் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார். பல ஆந்திரர்களும் கன்னட மலையாள நண்பர்களும் அந்த அமைச்சரவையில் பங்குகொண்டிருந்தனர். மொழி வழி மாநிலம் பிரியாத அந்தக் காலத்தில் எல்லா மொழியினரும் ஆட்சியில் பங்குகொண்டிருந்தனர். அந்தக் காலத்தில்