பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 ஆனந்த முதல் ஆனந்த வரை பங்கு கொள்ளவில்லை. இந்தி நுழையத் தொடங்கிய காரணத்தால, அந்த அடிப்படையில் அதைப் புகுத்திய கட்சிக்கு எதிராக நான் பல கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் அந்தப் பங்குகொள்ளும் நிலை காஞ்சியில் வாழ்ந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு-சிறப்பாக டாக்டர் சீனிவாசன் அவர் களுக்கு என்பேரில் வெறுப்புகொள்ளக் காரணமாயிற்று. அக் காலத்தில் அவர் சிறந்த மருத்துவராக இருந்ததோடு, நகர சபைத் தலைவராகவும், நிறைந்த செல்வாக்கு உடையவராக வும் இருந்தார். மேலும் அவர் அத்தொகுதி எம். எல். ஏ. வாகவும் இருந்தார் என எண்ணுகிறேன். எனவே அவரது சொல்லை மேலுள்ள இராசகோபாலாச்சாரி முதல் யாவரும் கேட்டனர். எனினும் நான் தனியார் பள்ளியில் பணி யாற்றியமையால் என்னை அவர்கள் ஒன்றும் செய்ய இயல வில்லை. ஒருநாள் ஒரு கூட்டத்தில் (வைகுண்ட பெருமாள்கோயில் 'அருகில் என எண்ணுகிறேன்) நான் தலைமை வகித்துப் பேசினேன். என் நண்பர் மாகறல் திருநாவுக்கரசு என்பவர் என்னைத் தேடிக்கொண்டுவந்து, வீட்டில் நான் கூட்டத் துக்குப் போயிருந்ததைக் கூற, அங்கே வந்து வெளியே நின்று கொண்டிருந்தார். அவர் காஞ்சி நகராட்சியில் ஆசிரியப் பணிபுரிந்து வந்தார். கூட்டம் முடிந்ததும் அவரும் நானும் பேசிக்கொண்டே போனோம். அதற்குப் பிறகு ஒருசில நாட்களில் நகராட்சி ஆணையர்களிடமிருந்து அவர் இந்தி எதிர்ப்பு’க் கூட்டத்தில் கலந்துகொண்டது தவறு என்றும் அவர்மேல் நடவடிக்கை எடுக்கப்பெறும் என்றும் கடிதம் வந்தது. அவர் சற்றும் அஞ்சவில்லை. எனினும் உத்தியோகம் அல்லவா! மேல் உள்ளவரிடம் வாதாடினார்-எழுதிக் காட்டினார். மேலதிகாரிகளுக்கு விண்ணப்பம் செய்தார். முடிவில் அவருக்கு ஓராண்டு உயர்வு ஊதியம் நிறுத்தப்பட்டே