பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 237 இன்மையாலும் நானும் இளையவனாய் எங்கோ பள்ளியில் ஆசிரியனாய் அதிலும் தமிழாசிரியனாய் இருந்தமையாலும், நாங்கள் பெருஞ்செல்வர்கள் அல்லர் ஆதலாலும் ஊர் தொறும் அவர்கள் ஏளனப் பேச்சு அதிகமாயிற்று. அவற்றுள் ஒன்று-எங்கட்குத் தேர்தலுக்குச் செலவு செய்யப் பணம் கிடையாதென்றும் என் அன்னையர் கழுத்தில் இட்டிருக்கும் நகைகளை (செயின்) விற்றுத் தான் செலவிட வேண்டு மென்றும் கூறியது. இக் கூற்றே என் அன்னையரை வெகுண் டெழச் செய்தது. சில ஊர்களுக்கு அவர்களே வந்து கூட எனக் கென வாக்குகள் கேட்டனர். மும்முனைப் போட்டியில் அந்த இருவரும் ஒருசேரப் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் நான் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியுற்றேன். ஆனால் இந்த வெற்றிக்கு உதவியவர் எத்துணையர்-பெற்ற அனுபவம் எத்தகையது! பல காட்சிகள் இன்னும் என் உள்ளத்தில் நிலைத்துள்ளன. ஊருக்கு உதவ என்று நூற்றுக் கணக்கில் பணம் வாங்கி ஏப்பம் விட்டவர்கள் இன்னும் உள்ளனர், ஐம்பத்தாறு ஊர்கள் கொண்ட அந்தத் தொகுதி யில் எத்தனை எத்தனை வகையான மக்களைக் காண நேர்ந்தது. எனக்கு வேலை செய்வதாகப் பணம் வாங்கிக் கொண்டு, எதிரிக்கு வேலைசெய்ய நினைத்த துரோகிகளும் இன்னும் வாழ்கின்றனர். நாங்களும் ஒவ்வொரு ஊரிலும் கூட்டமிட்டு, எங்கள் கொள்கைகளைத் திட்டமாக விளக்கினோம். மற்ற இருவேட் பாளர்களைக் காட்டிலும் நானே மேடை ஏறி மக்கள் உள்ளங் கொள்ளப் பேசிய தன்மை அனைவரையும் கவர்ந்தது. என் மாணவ நண்பர்கள் ஊருக்கு இருவராக இராப்பகலாகத் தங்கி, அவ்வூர் வாக்காளர்களிடம் பரிந்து பேசி வாக்குகளைப் பெறமுயன்றனர். அவர்கட்கெல்லாம் அவ்வவ் ஊரார் மகிழ் வோடு உணவு அளித்துக் காத்தனர். என் உக்கல் மாமனார் திரு. கோபால முதலியார் அவர்களும் அவர்தம் குடும்பமும்