பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை - 241 வேண்டுமென்றும் ஒலை அனுப்ப ஏற்பாடு செய்தார். ஆயினும் என் தலைமை ஆசிரியர் அதற்கெல்லாம் சளைக்க வில்லை. பல ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியராக இருந்து எல்லா நுணுக்கங்களையும் அவர் அறிந்திருந்தவராதலின் அவர்கள் அதுபற்றிக் கலங்கவில்லை. பதிலுக்கு இரண்டை யும் வைத்துக் கொண்டிருந்தால் என்ன நடக்கும் என்று பதில் ஒலை விடுத்தார், ஆனால் அதற்கு நேரடியாகப் பதில் எழுத முடியாத அரசாங்கம், கல்வித்துறையிலுள்ள ஒரு மேலதிகாரியை அனுப்பி நான் தொடர்ந்து இரண்டையும் வைத்திருந்தால் அரசாங்கம் பள்ளிக்குத் தரும் மானியத் தொகை நிறுத்தப்படும் என்று சொல்லவைத்தது. தலைமை ஆசிரியர் விதிகளை யெல்லாம் நன்கு அறிந்தவராதலின் சற்றும் தயங்காது அவ்வாறு சட்டம் இருப்பின் செய்து கொள்ளட்டுமே என்று திட்டமாகச் சொல்லிவிட்டார். ஆனால் அவற்குமேல் அவர்களால் ஒன்றும் செய்ய இயல வில்லை. அத்துடன் அவர்கள் அந்தப் பணியை விட்டு விட்டார்கள். நானும் வெளிப்படையாகவே அரசியலில் கலந்து கொண்டு தொண்டாற்றினேன். பின் நடை பெற்ற பல இந்தி எதிர்ப்பு மாநாடுகளில் பங்கு கொண்டேன்; அதே வேளையில் பள்ளிப் பணிக்கு யாதொரு இடையூறுமில்லாமல் பார்த்துக் கொண்டேன். இவ்வாறு பள்ளிப்பணி அமைதி யாகச் சென்றது. 7. தமிழ்க் கலையின் தோற்றம் அரசியலும் மொழியியலும் வாழ்வியலில் சிக்கிய பிறகு ஒய்வுகொள்ள இயலுமா? அவற்றுடன் சமய இயலும் என் வாழ்வில் இடம் பெற்றது. சைவசித்தாந்த மகாசபைக் கூட் டங்களுக்குத் தவறாது சென்று வந்தேன். அத்துடன் ஆ-16 - -