பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 ஆனந்த முதல் ஆனந்த வரை யையும் செய்து, அவரிடம் முன்னரே பணிபுரிந்திருந்த நல்ல சிலரை எனக்கு உதவுமாறும் அனுப்பி வைத்ததோடு, தொடங்கிய வேளையில் உடன்இருந்து வாழ்த்தியருளினார். நல்லவர் வாழ்த்த அச்சகம் நன்கு வளர்ந்து வந்தது. பொருளாதார முட்டுப்பாடு தொடர்ந்து வந்திருந்த போதிலும் அச்சகம் நன்கு வளர்ந்தே வந்தது. திங்கள் இதழும் சிறக்க ஓங்கிற்று. காஞ்சியில் இருந்த பல அன்பர்கள் விளம்பரம் தந்தும் உதவினர். நான் கடைசியில் சென்னைப் பச்சையப்பரில் பணி ஏற்க வரும் வரையில் அச்சகம் கூட்டா கவே இயங்க, நான் வரும்போது அதைத் திரு. காளப்பருக்கு உரிமையாக்கி, பெயரை மட்டும் நான் ஏற்று வந்தேன். பிறகு சென்னையிலேயே அதே பெயருடன் 'தமிழ்க்கலை இதழ் நான்கு ஆண்டுகள் நடைபெற்றது. இடையில் உண்டான போரின் காரணமாகக் காஞ்சியில் நடைபெற்று வந்த இதழ் நான்காண்டுகள் கழித்து நிறுத்தப்பெற்றது. பிறகு அச்சகம் மட்டும் தொழிற்பட்டு வந்தது. போரின் காரணமாகத் தாள் விலை ஏறிய காலத்தில் ஒருசிறு தொகையை மூலதன மாக வைத்து, தாள்களை வாங்கி வைத்திருந்தாலும் நாங்கள் பெருஞ்செல்வர்களாயிருப்போம். ஆயினும் எங்களில் ஒருவரும் பெருஞ்செல்வர் அல்லராகிய காரணமும் அத்தகைய வாணிப நுணுக்கம் அறியா நிலையும் எங்கள் வாழ்வை அன்று உயர விடவில்லை. எப்படியோ அச்சகம் நன்கு நடை பெற்று வந்தது. அச்சகப்பணி செம்மையாக நடைபெற்ற காலத்தில் நானும் காளப்பரும் நன்கு பழகினோம். இருவரும் உடன் பிறந்தவர்களோ எனப் பலரும் வியந்தனர்-சிலர் எண்ணினர். எங்கள் இருவர் குடும்பமும் ஒன்றி வாழ்ந்ததெனலாம். இருவர் வீட்டு உறவினர் பலரும் இருவரையும் ஒத்து நோக்கியே போற்றினர். எங்கள் வீட்டுச் சிறப்பு அவரின்றி நடைபெறாது-அவர் வீட்டுச் சிறப்பும் அப்படியே. பிற்