பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 ஆனந்த முதல் ஆனந்த வரை காஞ்சியிலே எங்கள் வாழ்க்கை அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. ஓர் முறை என் அன்னையார் எங்களைக் காணவந்து எங்களோடு தங்கி இருந்தார்கள். எதிர்பாராதபடி அவர்கட்கு உடல் நோய் உண்டாயிற்று. நோயின் வெம்மை மிக, ஒர் எல்லையில் அவர்கள் உயிர் பிரியும் நிலையும் வந்துற்றது. பிறகு சற்றே தெளிவும் பெற்றனர். அந்த வேளையில் அவர்கள் பேசினார்கள். எப்படியும் தன் முதல் மருமகளைக் காணவேண்டும் எனவும் தனது கடைசி விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுவது எனது கடமை எனவும் கூறினார்கள். நான் செய்வதறியாது திகைத்தேன். எத்தனையோ ஆண்டுகள் கழித்து, மறுபடி எப்படி அவர்கள் வீட்டிற்குச் சென்று அழைப்பது என எண்ணமிட்டேன். இதிலெல்லாம் காளப்பர் முன்னின்று செயலாற்றவல்லவர். பிரிந்தாரைக் கூட்டிவைப்பதிலும் மாற்றாரை மாற்றுவதிலும் வல்லவர். அவர் உடனே என்னை அழைத்துக்கொண்டு அங்கம்பாக்கம் புறப்பட்டார். நாங்கள் இருவரும் அவர்கள் வீட்டில் போய் மூன்று மணிநேரம் வாதாடினோம். அவர்கள் என்னையும் என் குடும்பத்தாரையும் வைததை இன்று நினைத்தாலும் குலைநடுங்குகிறது. அவர்களை வணங்கி வேண்டினேன். என் அன்னையார் இறுதி ஆசையை நிறைவேற்றிவைக்க வேண்டுமென முறையிட்டேன். எத்தனையோ கட்டுப்பாடுகள் விதித்து என்னுடன் என் மனைவி என்பாரை அனுப்பிவைத்தனர். காஞ்சிபுரம் வந்து சேர்ந்து, என் அன்னைமுன் நிறுத்தினேன். அன்னையார் கண்ணிர் வடித்தார்கள், பிறகு இரு மருமக்களையும் ஒரு சேரக் கண்ட மகிழ்ச்சியோ என்னமோ அவர்கள் நன்கு தெளிவு பெற்றார்கள். பிறகு இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து, எனக்கு மேலும் வழிகாட்டியாக இருந்த பிறகே அவர்கள் காஞ்சியிலேயே மறைந்தார்கள், -