பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 253 இருந்தேன். கடைசியாகக் கண்ட இடம்? அவனைப் பிணமாகத்தான் என்னால் காண முடிந்தது. மைந்தன் பிறந்ததை எப்படிச்சொல்லி அனுப்ப வில்லையோ அப்படியே இறந்ததையும் அவர்கள் சொல்லி அனுப்பவில்லை. எனினும் ஊரில் எங்கள் நிலங்களைப் பார்த் திருந்த பெரியவர் உடனே ஆளை அனுப்பினார். நானும் பெரிய அன்னையாரும் சென்று. அவனைப் பொசுக்கி விட்டுத் திரும்பினோம். அவர்கள் வீட்டிற்குச் சென்று பின்ளையின் பிணத்தைக் கண்டு கலங்கிய போதும் அவர்கள் வாய் திறக்க வில்லை. நாங்கள் திரும்பக் காஞ்சிபுரம் வந்துவிட்டோம். காஞ்சிபுரம் வந்த ஒரு திங்களில் என் பெரிய அன்னை யாருக்கும் கட்டி கண்டது. அவர்களும் அதிலிருந்து தப்ப முடியவில்லை. அவர்கள் உயிர் பிரியச் சிறிது நேரமே இருந்தது. என்னை அருகழைத்து நான் சிறிது பொழுதில் மறைந்துவிடுவேன். நீ மட்டும் அழுதுகொண்டிருக்காதே. இனி உன்னைத் தேற்றுவார் யாரும் இல்லை. நீயாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு முன்னுக்கு வர வேண்டும்’ என்றார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் உயிர் பிரிந்தது. அவர்கட்கும் காஞ்சியிலேயே முறைப்படி செய்ய வேண்டிய சடங்குகளை யெல்லாம் செய்துமுடித்தேன். என் துன்ப மிகுதியைக் கண்ட என் தலைமை ஆசிரியர் அந்த ஆண்டின் பிற்பகுதியையும் சம்பளத்தோடு விடுமுறையாக அளித்தார். இந்தக் கொடுமைகளை யெல்லாம் தாங்கிக் கொண்டு காஞ்சியில் கடைசி சில ஆண்டுகளை நடைப் பிணமாகக் கழித்தேன் என்னலாம். இதற்கிடையில் அச்சகப் பணியும் காள்ப்பர் போன்ற நல்லவர் உறவும் உக்கலில் வாழ்ந்த பெரியவர்தம் ஆறுதலும் என்னை மனிதனாக வாழ வைத்தன. காஞ்சி வாழ்க்கையில் நடைபெற்ற இன்னும் சில நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து காணலாம் என எண்ணி இப்பகுதியை இம்மட்டோடு முடிக்கின்றேன்.