பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 255 ஒரு தினசரியில் அதுபற்றி தெளிந்த விமரிசனம் தீட்டி யிருக்கக்கண்டேன். இவ்வாறு அக்காலத்திய போர் நிலையை நாம் ஆய்ந்துகொண்டிருந்த வேளையில் மேலை நாட்டில் ஜெர்மனி நாடு ஒவ்வொரு நாடாக விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டே இறுதியாக ஆங்கில நாட்டின் மேலும் போர்க் கொடி உயர்த்திவிட்டது. எனவே ஆங்கிலேயர் கீழ் இருந்த நம் நாடும் நேரடியாகப் போரில் கலக்க வேண்டிய தேவை உண்டாயிற்று. அந்த நிலையில் கிழக்கே ஜப்பான் நாடும் ஜர்மனியோடு சேர்ந்து போரிட உலகப் போரே உருவாகிவிட்டது. பிறகு ரஷியாவையும் ஜர்மனி, ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் இருபுறமும் போருக்கு ஈர்த்தன. இந்நிலையில் நாட்டிலும் உலகிலும் போர்க் குழப்பங்கள் மிகுந்த வேளையில் என் மனத்திலும் பல்வேறு குழப்பங்கள் புகுந்துகொண்டன. என் அன்னையார் இருவரும் மறைந்த பிறகு என் செலவெலாம் ஓய்ந்துவிட்டன. பள்ளிப் பணிக்கு ஓராண்டு விடுமுறை மேற்கொண்டேன். வெளியே அரசியல் கூட்டங் களுக்காயினும் சரி-சமயக் கூட்டங்களுக்காயினும் சரிவேறு எதற்காயினும் சரி எங்கும் செல்வதில்லை. மாவட்டக் கழகக் கூட்டங்களுக்கும் சரியாகச் செல்வதில்லை, மூன்று கூட்டங்களுக்கும் வாராவிட்டால் உறுப்பினர்ப் பதவி நீங்கப் பெறும் நிலையும் உண்டாகி, மறுபடியும் சேர்த்துக்கொள்ளப் பெற்றேன். என் ஊரில் உள்ள நிலபுலன்களைக் கண் காணிக்க வேண்டியிருந்தது. என் பெரிய அன்னையாரும் அவருடைய நிலபுலன்களையெல்லாம் என் பெயரிலும் என் மனைவி சந்தரமணியின் பேரிலும் எழுதிவைத்துச் சென்றனர். எனவே அவற்றையும் கண்காணிக்க வேண்டி யிருந்தது. ஊரில் ஒரிரு மாதங்கள் தங்கி எல்லா நிலங் களையும் அளந்தோம். அப்போது பல உண்மைகன் வெளி யாயின.