பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 ஆனந்த முதல் ஆனந்த வரை எனக்குத் தந்த உணர்வே படிக்கலாம் என்று தோன்றிற்று. முதலில் இடை நிலை (Inter) வகுப்பு ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவேண்டும். அவர் வீட்டிற்கு வந்து அந்தப் பாடங்களை யெல்லாம் நன்கு சொல்லிக் கொடுத்தார். நானும் ஒரு மாணவனாகவே இருந்து பயின்றேன். எனவே ஒருமுறை தவறினாலும் அடுத்த முறையில் (செப்டம்பர்) வெற்றி பெற்றேன். நான் தேர்வு எழுதிய அந்த நாட்களில்தான் கிழக்கே ஜப்பானியர் பேயாட்டம் தலைவிரித்தாடிற்று. சிங்கப்பூர், மலேயா. பர்மா அனைத்தையும் அவர்கள் விழுங்க, நம் நாட்டு மக்கள் நைந்து வாடி வந்த வகைகளை யெல்லாம் கேட்டுக் கேட்டுக் கண்ணிர் வடித்தேன். சென்னையிலும் அவன் குண்டுவரும் என்று பயந்துதான் அந்த ஆண்டு சென்னையில் எழுத இருந்த மாணவர்களை, அவர்தம் தேர்வு களை வெளியூர்களில் எழுதப் பல்கலைக் கழகத்தார் ஏற்பாடு செய்துவிட்டனர். அந்த இடமாற்றம் நாட்டுக்குழப்பம் முதலியன என்னை முதலில் தேர்வு பெறாமல் செய்து விட்டது. பிறகு செப்டம்பரில் வேலூரில் சென்று தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். பிறகு பீ. ஒ.எ ல் படிக்க விரும்பினேன். அதற்குரிய ஆங்கிலப் பாடங்களை மினர்வா கல்லூரியில் பயின்றேன். அப்போதுதான் அறிஞர் திரு. பரசுராமன் எனக்கு அறிமுக மானார்கள். அவர்தம் பன்மொழிப் புலமையையும் ஆழ்ந்த அறிவையும் தெளிந்த சிந்தையையும் விளக்கப் பேச்சையும் எண்ணி எண்ணி வியந்தேன். அவர்களும் நான் ஆசிரியனாக இருந்து பயில வந்தமையின் எனக்குத் தனிச் சலுகைதந்து காத்தனர். அவருடன் இருந்த சர்வோத்தமராவ் என்பாரு டைய ஆங்கில வகுப்பு மிகச் சிறந்தது. அவர்களிடம் பயின்ற நான் தேர்வில் வெற்றிபெற்றேன் என்று சொல்ல வேண்டுவ தில்லை, மூன்றாவது பிரிவையம் தனிமையாகப் பயின்றேன்.