பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 265 இதற்கிடையில் காஞ்சி ஆண்டர்சன் பள்ளியில் தலைமை ஆசிரியர் மாறி வேறு ஒருவர் அப்பதவியைப் பெற்றார். தமிழாசிரியர் ஒருவர்-எனக்கு ஆசிரியராக இருந்தவர்-என் கீழே பணிசெய்ய வந்தார். எனவே அங்கே தொடர்ந்து பணியாற்றுவதில் சில சிக்கல்கள் முளைத்தன போர் தொடர்ந்து நடைபெற்று வந்தது. நானும் என்பணிகளுக் கிடையில் போர் அமைதிப் பணிக்கும் ஆவன செய்து கொண்டே வந்தேன். 9. தோயாவாம் தீவினையே காஞ்சி வாழ்வில் சமய ஈடுபாடு அதிகம் பெற்றேன். சமயநெறி போற்றும் கிறித்துவப் பள்ளியில் பணியாற்றியதும் அதற்கு ஒரு காரணமாகலாம். நான் என் உயர்நிலைப் பள்ளிப் படிப்பினைச் செங்கற்பட்டுக் கிறித்துவப் பள்ளியில் படித்து முடித்தேன். அப்பொழுதே கிறித்துவ நூல்களைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு உண்டாயிற்று. எனினும் அதில் அதிகமாக நான் ஆழ்ந்து பயின்றது கிடையாது. அங்கிருந்த ஆசிரியர்கள் அப்பாடங்களைக் கட்டாயமாக்கியமை அதற் கொரு காரணமாகலாம். ஆயினும் காஞ்சியில் பணி ஏற்றபின் அவர்தம் சமய நூல்களை விரும்பிப் படித்தேன். பல கருத்துக் கள் என்னை ஈர்த்தன. சிலவற்றைப் பற்றிக் கிறித்துவ ஆசிரியர்களிடமும் வாதிடுவேன். நம் சமயத்தில் சொல் லாதனவற்றை அதில் சொல்லி இருக்கிறது என்ற எண்ணம் எனக்குக் கிடையாது. அந்த நாளிலேயே ஓரளவு சைவ வைணவ இலக்கியங்களையும் சமய சாத்திரங்களையும் பயின்றவனாதலின் அவற்றில் சொல்லாதவனற்றை விவிலிய நூல் கூறுகிறது என்று நான் கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் அந்நூலைப் போற்றும்முறை, பயிலும் முறை