பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 25 காது உதைக்காது அன்பினாலேயே வளர்த்து நல்லவனாக்க முடியும் என்று நம்பினார்கள். எனவே அம்மா என்னை அடிக்கும் போதெல்லாம் பாட்டி சிபாரிசு’க்கு வருவார்கள். இதனால் அவர்களுக்குள் வார்த்தைகள் முற்றும். நான் உண்மையில் என் அடிக்கு அழுவதைவிடப் பாட்டியின் பரிவுக் காகவே கண்ணிர் விடுவதுண்டு. . என் தாத்தா இறந்தவுடனேயே என் அம்மாவும் பெரியம்மாவும் பங்கிட்டுக்கொண்டார்கள். எனவே என் னுடன் அம்மா, அப்பா, பாட்டி மூவரும்தான் இருந்தார்கள். அப்பா ஊரிலுள்ள சில நல்லவர்களோடு சேர்ந்து வேறு வழியில் திரும்பிவிட்டார் என்னலாம். எனவே என்னைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அம்மாவுக்கு அதிகமாயிற்று. அதனாலேதான் அம்மா என்னை எப்படியும் நல்லவனாக்கி முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்படியே பாட்டியும் ஆசைப்பட்டார். அவர்கள் இருவருக் கும் இடையில் நான் எங்கள் ஊரிலேயே பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டு வந்தேன். பாட்டியுடன் காலையில் பூந்தோட்டத்திற்குச் செல் வேன். பகலில் ஒய்வு வேளையின்போது கத்தரித் தோட்டத் திற்குச் செல்வேன். மாலையில் கோயிலுக்குச் செல்வேன். இப்படிச் செல்லும் போதெல்லாம் அவர்கள் பலப்பல சிறு கதைகளையும் பாட்டுக்களையும் சொல்லிக்கொண்டே இருப் பார்கள். அவர்களுக்கு அ, ஆ படிக்கத் தெரியாது; எழுத்து வாசனையே கிடையாது. என்றாலும் பல கதைகள் சொல்லுவதிலும் பண்பாட்டோடு நடந்துகொள்வதிலும் அவர்கள் திறம் வாய்ந்தவர்கள். எந்த வேளையிலும் ஒய்வாக உட்காரமாட்டார்கள். அப்போது எங்களுக்கு ஒரு மாந்தோப்பு இருந்தது. அதில் துடைப்பங்கள் உயரமாகச் செழித்து வளர்ந்து இருக்கும். அவர்கள் அந்தப் புதர்களி லெல்லாம் சென்று அவற்றைச் சேகரித்து வருவார்கள். பலர்