பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 269 சென்று அவர்தம் தொழுகையில் கலந்து கொண்டிருக்கிறேன். இவற்றுக்கிடையில் எங்கள் பள்ளியில் எழுத்தாளராக இருந்த திரு. தேவராச முதலியார் அவர்களுடைய நாத்திகவாதப் பேச்சுக்களையும் கேட்டுக் கொள்வேன். அவருக்கு எப்படியோ இளமையிலிருந்தே- பெரியாரைப் பின்பற்றியதாலோ ஏனோ-அந்தக் கொள்கை ஊன்றி விட்டது. காஞ்சிப் பெரியார்’ என்றே நாங்கள் அவரை அழைப்பது வழக்கம். அவர் கொள்கையை மறுக்கும் வகையில் நான் பலப்பல வாதங்கள் புரிவேன். இப்படிப் பலசமய நெறிகளுக்கு இடையில் நான் என் சைவ சமய ஒழுக்கத்திலிருந்து சிறிதும் வழுவாமல் வாழ்ந்து வந்தேன். அது அனைவருக்கும் வியப் பாகவே இருந்தது. பழங்காலத்தில் சிறந்தோங்கி வாழ்ந்து காஞ்சி நகரையே தம் கொள்கையின் கீழ் அடக்கிவைத்திருந்த சமணமும் பெளத்தமும் தற்போது அவ்வளவாக இல்லை. ஊருக்கு வெளியே சீன காஞ்சி' என்ற கோயில் வேகவதி ஆற்றங் கரையில் உள்ளது. அதன் பொறுப்பாளர் காஞ்சி பச்சை யப்பர் பள்ளியில் பணியாற்றிய அப்பாவு நயனார் என்பவ ராவர். அவர் மகன் பானு' பள்ளியில் என் மாணவன். எனவே அவர்களோடு அந்தச் சைனர் சினகரத்'துக்கும் அடிக்கடி செல்வேன். கோயில் பெரியது-துய்மையானதுபோற்றி வணங்கத் தக்கது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து வரும் மக்கள் அக்கோயிலை வணங்காமல் செல்வதில்லை. காஞ்சியின் பல பகுதிகளிலும் ஆழ்ந்திருக்கும் நிலப்பகுதிகளில் சிற்சில சைன பெளத்தச் சிலைகள் இன்னும் அகப்படுகின்றன. மணிமேகலை அறப்பெருஞ் செல்வியாய் வாழ்ந்ததெரு அதே பெயரால் இன்றும் வழங்குகின்றதே. ஆயினும் அங்கே பலருக்கு அரப்பணஞ் சேரித்தெரு’ என்றால்தான் புரியும். இவ்வளவு உருமாறியுள்ளது அத்தெருவின் பெயர். இத்தனைச் சமயங்களுக்கிடையிலும் தொன்மைச் சமயங்