பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 ஆனந்த முதல் ஆனந்த வரை களாகிய சைவம் வைணவம் இரண்டும் காஞ்சியில் தழைத் தோங்கி நின்றன-நிற்கின்றன-நிற்கும் என்பதும் உறுதி. காஞ்சியில் சைவ சமயத்தை வளர்க்கப் பல சங்கங்கள் தோன்றி வளர்ந்தன. அவற்றுள் ஒன்று-முக்கியமானது நான் இருந்த காலத்தில் பணியாற்றி வந்தது. அதுவே மெய்கண்டார் கழகம் என்பது. சிவஞான போதத்தை உலகுக்குத் தந்த அறவொளிச் செம்மலின் பெயரால் அக்கழகம் அமைக்கப்பெற்றுச் சிறக்கப் பணியாற்றிற்று. பச்சையப்பரில் பணியாற்றிய திருவாளர்கள் வச்சிரவேலு முதலியார், திருஞானசம்பந்த முதலியார் ஆகியோர் அதன் உயிர் நாடியாக இருந்தனர். பின்னவர் தம் வாழ்நாளை அதற்கே அர்ப்பணித்தார் எனலாம். நான் எதிலும் ஒதுங்கி இருப்பது போன்று, அதிலும் அதிகப் பங்கு கொள்வதில்லை. ஆயினும் அவர்கள் அழைக்கும்போதெல்லாம் அவர்கள் குறிக்குமிடத்துக்குச் சென்று சொற்பொழிவாற்றி வருவேன். அவர்கள் என்பால் அன்றும் இன்றும் அன்புடையவர் களாகவே உள்ளனர். என் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைச் சான்றாக இன்றும் திருஞானசம்பந்த முதலி யார் கூட்டங்களில் என் பெயரைச் சொல்லி எடுத்துக்காட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதையும் ஈண்டு எண்ண வேண்டி யுள்ளது. இவற்றுக்கிடையில் நான் முன்னரே காட்டிய நாராயண சேவாச்சிரமத்தில் ஆண்டுதோறும் குரு பூசைப் பணி செம்மை யாக நடைபெறும். பல அறிஞர்கள் சமயச் சொற்பொழி வாற்றுவார்கள். நான் காஞ்சிபுரம் சென்று சேர்ந்த அதே ஆண்டில் திரு. சேதுப்பிள்ளை அவர்கள் அண்ணாமலையி லிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள். என்னைச் சேவாச்சிரமத்து அடிகளார் அழைத்து எப்படியும் அந்த ஆண்டிற்குச் சேதுப்பிள்ளையை அழைத்து வரவேண்டுமென்று கட்டள்ையிட்டார்கள். நானும் மகிழ்வோடு சென்னை