பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 271 சென்று அவர்களை வருமாறு வேண்டி ஏற்பாடு செய்து வந்தேன். அவர்கள் அந்த ஆண்டு வந்து ஆற்றிய சொற் பொழிவு மிகமிக உருக்கமாக இருந்தது. அவரை அனைவரும் பாராட்டினர். அதுதான் அவருக்கு முதல் தடவை காஞ்சிபுரப் பயணமும் பேச்சும். அந்தப் பேச்சு முடிவில் நன்றி கூற வந்த முன்னாள் நகர்மன்றத் தலைவர் பிள்ளையார்பாளையம் திரு. சுவாமிநாத முதலியார் அவர்கள் மிக உருக்கமாகவும் அழகாகவும் நன்றி கூறினர். இந்தச் சேதுவைக் கண்டால் பாவம் போமே ஜனகன் பெண்ணே-இகபர சித்தியாமே! என்று கவிராயர் இராம நாடகக் கீர்த்தனையில் சேதுவைக் காட்டி இராமன் சீதைக்குத் தலப் பெருமையை விளக்கிய தைச் சுட்டி, அப்படியே இந்தச் சேதுவைக் கண்டால் யாவும் பெறலாம் என்று போற்றி, சேதுப்பிள்ளையைச் சிறப் பித்து நன்றி கூறினார். அடிகள் மிகவும் மகிழ்ந்தார்கள். முடிவில் பிள்ளை அவர்கள் உடலில் உள்ள நீங்காத நோய்க்கு அடிகளார் மருந்து தந்தார்கள். அதனால் முற்றும் குணமடைந்த பிள்ளை அவர்கள் தாம் வாழ்ந்த நாள்வரை ஒவ்வோர் ஆண்டும் தவறாது மடத்துக் குரு பூசைக்கு வந்து தம் கடமையாகிய சொற்பொழிவை ஆற்றிச் சென்றனர். ஒரு காலத்தில் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்க இவர் பேச இருவரும் ஒருவரை ஒருவர் இராமாயணப் பாடல்கள் வழியே ஏத்தியும் தாழ்த்தியும் இரட்டுற மொழிந்தும் பேசிய பேச்சுக்கள் மக்கள் மனத்தை மகிழ்வித்தன. இவ்வாறே ஏகாம்பரநாதர் விழாவில் பன்னி ரெண்டு நாட்கள் பல அறிஞர்கள் பேச்சுக்கள் நடைபெறும். நான் அவற்றிலெல்லாம் கலந்து கொண்டு பேசியும் பெரிய வர்கள் பேசக் கேட்டும் நிரம்பப் பயன்பெற்றேன். சமய உண்மையை ஒரளவு உணர என் காஞ்சி வாழ்க்கை எனக்குத் துணையாயது.