பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 275 என்ற பாடலே அது. வெண்ணெய் நல்லூர்க் கேடிலியப்பப் பிள்ளைக்கு மகப்பேறு இன்மையின் தேவாரத்தில் கயிறு சாத்தி இப்பாடலைப் பெற்றனர் என்றும் உடனே திருவெண் காடு சென்று முக்குள நீரில் மூழ்கி, வெண்காடு விகிர்தனை வழிபட்டனர் என்றும் அதன் காரணத்தாலேயே மெய் கண்டார் தோன்றினார் என்றும் அவரது சிவஞானபோதமே சைவ சித்தாந்தத்தின் அடிப்படை என்றும் உலகம் அறியு மல்லவா. ஆம்! அத்தகைய அருட்பாடல் அன்று எனக்குக் கிடைத்தது. நானும் கேடிலியப்பரைப் பின்பற்றினேன். குடும்பத் தோடு அந்தச் சனவரித் திங்களிலேயே திருவெண்காடு சென்று இறைவனை வழிபட்டேன். சீகாழியில் இறங்கி, அங் கிருந்து மாட்டு வண்டியில் சென்று ஒர் இரவு அங்கே தங்கி இறைவனுக்கு வழிபாடாற்றித் திரும்பினோம். அப்போது திரு. பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் (மாண்புடை பக்தவத்சலம் அவர்தம் மைத்துனர்) அங்கே அறக்காப்பாள ராக இருந்தனர். அவர்கள் எங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து அளித்தனர். வெண்காட்டு வேந்தையும் அன்னை யையும் முக்குளநீர் தோய்ந்தபின் தரிசனம் செய்து வரம் பெற்றுத் திரும்புகையில் புள்ளிருக்குவேளுர், சீகாழி, சிதம் பரம் ஆகிய தலங்களையும் கண்டு கண்டு வந்து சேர்ந்தோம். அதே நிலையில் சந்திராமணி கருவுற்றாள். பத்தாமாதம் ஆண் மகவு பிறந்தது. அனைவரும் மகிழ்ந்தனர். என்னை அதற்கு முன் கேலிசெய்த திரு. தேவராஜ முதலியார்போன்ற வர்களெல்லாம்கூட வியந்தனர். ஆம்! அந்தமகனுக்கு நான் மெய்கண்டான்' எனவே பெயரிட்டேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை என்பதை உலகம் உணர்ந்து கொண்டது. இந்த நிகழ்ச்சி முதலில் யாருக்கும் தெரியாதிருந்தும், பிறகு பலருக்கும் தெரிந்துவிட்டது. காரணம் மெய்கண்டார்