பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 ஆனந்த முதல் ஆனந்த வரை கழகமும் அதன் அச்சாகிய திருஞானசம்பந்த முதலியாருமே யாவர். அவர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் அந்த மெய்கண் டார் பிறப்பின் சிறப்பை விளக்கி, அது வெறும் கட்டுக்கதை அல்ல என்றும் இன்றும் நம்பினால் அதே பயன் உண்டாகும் என்றும் விளக்கி, சான்றாக என் பெயரைச் சொல்லி நான் பெற்ற வாழ்வை விளக்குவார்கள். இன்றும் காஞ்சியில் அவர் பேச்சைக் கேட்டு வருகின்ற அன்பர்கள் அதை என் னிடம் சொல்லிச் சொல்லிச் செல்வர். எனினும் நான் அதைப் பெருமையாகவோ விளம்பரமாகவோ யாரிடமும் சொல்லவில்லை-சொல்வதுமில்லை. எப்படியோ நம்பிக்கை யின் அடிப்படை-உண்மையின் எதிரொலி-உலகுக்கு அறிமுகமாகிவிடுகின்றது. ஆம்! அந்த மகனே இன்று வளர்ந்து உடன் இருந்து உற்றுழி உதவுகிறான். தீவினை தோயா என்ற நம்பிக்கையிலேயே என் வாழ்வும் நடை பெறுகிறது. அந்த நம்பிக்கையிலே என் மகன் வாழ்வும் அமைகின்றது. ஒரு சில திங்கள் கழித்து நாங்கள் மறுபடியும் குடும்பத் தோடு திருவெண்காடு சென்று இறைவனுக்கு வழிபாடாற் றிப் போற்றி, நன்றி தெரிவித்துத் திரும்பினோம். பிறகு நான் அந்தப் பக்கம் எங்கு சென்றாலும் திருவெண்காடு சென்றே வருவேன். என் மகன் வயது வந்த பிறகு அப் பக்கம் சென்றால் திருவெண்காடு சென்றுவரச் சொல்லுவேன். அண்மையில் அவன் மணம் முடிந்த பிறகு இருவரும் வெண் காடு சென்று வணங்கி வந்தனர். அதே வேளையில் என் ஊரில் என் முன்னோர்கள் ஏற்பாடு செய்த அறக்கட்டளை களெல்லாம் செம்மையுற நடைபெறுகின்றனவா எனக் கண்டு வரவும் எனது ஊர் நிலங்களின் விளைவு பற்றி அறிந்து வரவும் அடிக்கடி அங்கம்பாக்கம் செல்வேன். ஊரில் முன் னிருந்த பல பெரியவர்கள் மறைய மறைய, புதிதாக வருபவர் கள் ஊரின் ஒற்றுமையிலும் வளர்ச்சியிலும் அவ்வளவு அதிக