பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஆனந்த முதல் ஆனந்த வரை அவர்களை இதுபற்றிக் கேலி செய்தாலும் நம் வீட்டுக் காரியங்களைச் செய்வதற்கு நாம் ஏன்வெட்கப்படவேண்டும்?' என்று அவர்கள் அறிவுரை கூறி நீதி உணர்த்துவார்கள், என்னையும் அப்படியே எல்லா வீட்டு வேலையையும் செய்யச் சொல்லுவார்கள். சாமான் துலக்கும் வேலை முதல். வீடு துப்புரவு செய்யும் வேலைவரை எந்தச் சிறிய வேலையாயினும் நமக்காக நாமே செய்துகொள்வதில் தவறு இல்லை என்று கூறி அவற்றிலெல்லாம் என்னை ஊக்குவார்கள். அத்துடன் படிக்கும் வேளையில் படிப்பை நிறுத்தவும் ஒப்பமாட்டார்கள். எனவே அந்த இளம் வயதில் பள்ளிப்படிப்போடு வீட்டு வேலைகளையும் நான் கற்றுக்கொண்டே வந்தேன். அவர்களோடு தோட்டங்களுக்குப் போகும்போது அவர்கள் எத்தனையோ பாட்டுகளும் கதைகளும் சொல்லு வார்கள் என்று கூறினேன். அவர்கள் சொல்லிய அத்தனை யும் இன்று என் நினைவில் இல்லை. ஏதோ ஒரு பாட்டில் சில அடிகள்தாம் நினைவுக்கு வருகின்றன. அந்தப் பாட்டு வேடிக்கைப் பாட்டுத்தான். என்றாலும் அதன் அடிகள் ஒருசில எப்படியோ என் உள்ளத்தில் நிலைத்த இடம் பெற்று விட்டன. 'பிள்ளையார் பிள்ளையார் எங்கேயோ பிள்ளையார்? கத்தரித் தோட்டத்திலே களை பறிக்கிறாராம் பிள்ளையார் அங்கேயும் போய்ப்பார்த்தேன் அவர் எங்கேயோ - . பிள்ளையார்? வண்டைக்காய் தோட்டத்திலே வந்திருக்கிறார் e பிள்ளையார் அங்கேயும் போய்ப்பார்த்தேன் அவர் எங்கேயோ 娜 பிள்ளையார்? என்ற இந்தச் சில அடிகள்தாம் என் உள்ளத்தில் நின்றன. இதன் கருத்து என்ன என்று விளக்கஉரை கேட்குமாறு அன்றைக்கு நான் படிக்கவில்லை. என்றாலும் பிள்ளையார்